குரு பெயர்ச்சி 2022... குரு பலன் உங்க ராசிக்கு வந்து விட்டதா? அப்போ கெட்டிமேளம்தான்
குருபகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குருபார்வையால் சில ராசிக்காரர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்போகிறது.
சென்னை: நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் தனது ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குரு பகவானின் பார்வை கடகம், கன்னி, விருச்சிக ராசிகளின் மீது விழுகிறது.
இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளைத் தரப்போகிறது. திருமணம், வேலை வாய்ப்பு, பண வருமானம், குழந்தை பாக்கியம் கிடைக்க குருபகவானின் அருள் தேவை.
குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும் என்பதால் அதிகம் அச்சப்படத் தேவையில்லை.
இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் யாருடைய வீட்டில் கெட்டிமேளம் கொட்டப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான மீன ராசியில் குருபவான் சஞ்சரிக்க உள்ளார். 11ஆம் வீட்டில் குரு வரும் போது முழுமையான யோகத்தை கொடுப்பார். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கு 3ம் வீட்டினை குரு 5ம் பார்வையாக பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார். உங்களுடைய ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். திருமணமாகும் வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். மேலும் நன்மைகள் நடைபெற பெற கல்லாலமரத்தடியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்
குரு உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும்.
குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ஆம் இடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கன்னி
அழகும் அன்பும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, குருபகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம். குருவின் பார்வை, ராசியின் மீதும், லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். இது காதல் மலரக் கூடிய காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் கூடி வரப்போகிறது. பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும் காலம் வந்து விட்டது.

விருச்சிகம்
மனோதைரியம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். குரு தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உங்களுக்கு குரு பார்வை வந்து விட்டது. திருமணம் கைகூடி வரும். கெட்டி மேளச்சத்தம் கேட்கும். காதல் மலரும் காலம் இது என்பதால் உற்சாகத்தில் விசிலடிக்கலாம். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார். பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவது சிறப்பு. குரு பகவானால் மேலும் நன்மைகள் நடைபெற தென்திட்டை ராஜகுருவை வழிபடலாம்.

மகரம்
அறிவாற்றல் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர இருக்கிறார். குரு பகவான் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் வீட்டில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடைபெற வாலாஜாபேட்டையில் எழுந்தருளியுள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்
குரு பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே... உங்கள் ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. சிலருக்கு கல்யாணம் கை கூடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், வேலை செய்பவர்களுக்கு பளு அதிகரிக்கும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். உங்களுக்கு வேலையில் பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிவ ஆலயத்தில் நவகிரக குரு பகவானை திங்கட்கிழமை சென்று வணங்கி வரலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications