2024ல் திருமண யோகம்.. குரு பலன் யாருக்கு கிடைக்கும்.. குழந்தை பாக்கியம் பெறும் ராசிக்காரர்கள்
சென்னை: குரு பலன் இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பயணம், பார்வையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் தேடி வரும்.
குரு பார்வை யாருக்கு: 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகிறார். வியாழ வட்டம் ஏற்படப்போகிறது. குரு பயணம் செய்யும் இடம் மற்றும் பார்க்கும் இடத்தைப் பொறுத்து நன்மைகள் நடைபெறும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரம் ராசியையும் பார்க்கிறார். அதே போல இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களும், கடக ராசிக்காரர்களும் ராஜாதி ராஜ யோகம் கிடைக்கப்போகிறது.

மேஷம்: மேஷ ராசிக்கு இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம், ஜென்ம குரு ராமர் வனத்தில் என்பார்கள். மேஷ ராசிக்காரர்களே.. 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார் குரு பகவான். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரப்போகிறது. பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும். சித்திரை மாதம் வரைக்கும் குரு பலனால் திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2024ஆம் ஆண்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
கடகம்: உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான். 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருவின் பயணத்தால் செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானம், குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. 2024ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கல்யாணம் கைகூடி வரும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. 2024ஆம் ஆண்டில் நிறைய நன்மைகள் நடைபெறும். பதவியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் ஏற்படும். வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். குரு பலனால் உங்களுக்கு திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டின் மீது விழுவதால் திருமணமான தம்பதியினருக்கு கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது.
விருச்சிகம்: குரு பகவான் 2014ஆம் ஆண்டில் மே மாதம் முதல் 7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 7ஆம் இடம் களத்திர ஸ்தானம் நன்மையை கொடுக்கும் ஸ்தானம். திருமண பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் தரும் நேரடி குரு பார்வை விருச்சிக ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சண்டை போட்டு பிரிந்த தம்பதியர் கூட ஒற்றுமையுடன் குடும்பம் நடத்தப்போகிறார்கள்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகிறார். காரிய சித்தியாகும். இந்த ஆண்டு குரு நிறைய நன்மைகளை செய்யப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அமரப் போவதால் உங்கள் ராசிக்கு குருவின் அருள் பார்வை கிடைப்பதால் தொட்டது துலங்கும் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குருவின் பார்வை பலத்தால் உங்களுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியருக்கு நல்ல செய்தி தேடி வரும்.












Click it and Unblock the Notifications