Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரு திசை நடக்குதா?.. தடைகளை உடைக்கும் திருச்செந்தூர் போக மறக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூரில் குரு பகவான் புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். குரு திசை குரு புத்தி நடப்பவர்கள். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்.

குரு தசாபுத்தி: குருபகவான் தன காரகன், புத்திரகாரகன். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் கோடீஸ்வர யோகம் பெறும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். அதே சரியில்லாத நிலையிலோ வலுவிழந்தோ, நீசமடைந்தோ இருந்தால் அவரது தசாபுத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்துவார். எனவேதான் ஒருவருக்கு கோச்சார ரீதியாக குருபெயர்ச்சி பலன்கள் சொல்லும் போதே உங்கள் ஜாதகத்தில் குருவின் நிலை எப்படி இருக்கிறது. தசாபுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்யச் சொல்கின்றனர் ஜோதிடர்கள்.

Guru Peyarchi Palan 2024: Guru Parikara stalam Tiruchendur murugan temple

குரு பார்க்க கோடி நன்மை: குரு பொன்னவன். குரு பார்க்க கோடி நன்மை. குரு நின்ற இடம் பாழ், பார்க்கும் இடம் சுபிட்சம் என்றெல்லாம் ஜோதிட ரீதியான பழமொழிகள் உண்டு. பொன்னும், மஞ்சளும் குருவிற்கு உரியதாகிறது. பொன் எனப்படும் தங்கத்திற்கு அதிபதியும் குருவே. குரு முழுமையான சுப கிரகம் என்பதால் அவரது பார்வைக்கு எத்தகைய தோஷத்தையும் போக்கும் வலிமை உள்ளது.

குரு தரும் யோகம்: குரு, தனம் மற்றும் புத்திர காரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார்.ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை கிடைக்கச் செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ இருந்தால் சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ இருந்தால் தன லாபத்தை தடை செய்வார், புத்திரபாக்கிய தடையும் ஏற்படும்.

அஷ்ட லட்சுமி யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.

ஹம்ச யோகம்: குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

குரு தசையில் யோகம்: செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட மேஷ லக்னத்திற்கு குரு 9 மற்றும் 12ஆம் அதிபதி. அதே போல விருச்சிக லக்னத்திற்கு குரு 2 மற்றும் ஐந்தாம் அதிபதி. குரு தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். அதே போல கடகம், சிம்மம் லக்ன காரர்களுக்கும் தனது தசையில் யோகங்களையே செய்வார். இந்த நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையிலோ, மறைவு பெற்றோ, பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். கை தூக்கி விட்டு காப்பாற்றுவார்.

குரு செய்யும் நன்மை: ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. காரகம் குருவின் எதிரி சுக்கிரன். ரிஷப லக்னத்திற்கு எட்டிலும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் வீட்டிலும் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையோ தொடர்போ ஏற்பட்டால் நல்லது நடக்கும்.

திருமண வாழ்க்கை: மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திரமான 4, 7 , மற்றும் 10ஆம் வீட்டில் அமரும்போது யோகம் தருவார். நல்ல வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளால் பெருமையும் தேடி வரும். மகரம், கும்பம் லக்னகாரர்களுக்கு யோகாதிபதி இல்லை என்றாலும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு மகரத்தை பார்த்தால் தசையில் நன்மை நடைபெறும். அதே போல கும்ப லக்ன காரர்களுக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அமர்வது நன்மை நடக்கும்.

குரு எங்கு இருந்தால் நன்மை: தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.

ஹம்ச யோகம் தரும் குரு: சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் குருவால் உண்டாகும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னிக்கும் இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும். உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் இருந்தால் மட்டுமே குரு முழு யோகம் அளிப்பார்.

குரு பரிகாரம்: ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் திருச்செந்தூர் குருபரிகார தலம். குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயம். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும். ஒரு வியாழக்கிழமை குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.

புராண கதை: திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து கொள்வோம். தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.

குருவை தேடிய சூரபத்மன்: சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார் குருபகவான்.

தவம் செய்த குரு: சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்த காட்டுக்குள் வந்தார் குருபகவான். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை மனத்தில் இருத்தி தவத்தில் மூழ்கினார். அப்போது கயிலையில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னியாக உதித்த குமாரனைக் கண்டார் குரு. அன்னையின் சிலம்பில் இருந்து வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன் ஆகிய நவ வீரர்கள் தோன்றினர்.

படை திரட்டிய சுப்ரமணியர்: கார்த்திகைப் பெண்கள் மூலம் வளர்ந்து ஆளான முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் இந்தக் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள். தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.

குரு பரிகார ஸ்தலம்: அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம் என்று கூறினார். யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும் என்றும் கூறிச் சென்றார்.

திருமண வரம்: அது முதல் திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளையை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+