குரு பெயர்ச்சி பலன் 2024: கல்யாண வைபோகம்.. குரு பலனால் யார் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும்?
சென்னை: குருபகவான் மனிதர்களின் திருமணம், செல்வாக்கு, குழந்தை பாக்கியம் ஆகியவற்றிக்கு காரணகர்த்தாவாக திகழ்வதால் குரு பெயர்ச்சியை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். குரு பகவானின் சுப பார்வையால் எந்த ராசிக்காரர்களின் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும்? யார் வீட்டில் தொட்டில் ஆடும் என்று பார்க்கலாம்.
குரு பார்வை: குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். குருவின் பார்வை ஏப்ரல் மாதம் வரைக்கும் சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. இன்னும் ஆறு மாத காலத்திற்கு இந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப்போகின்றனர். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குருபெயர்ச்சி எப்போது?: குருபகவான் திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். காலபுருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தில் இது இரண்டாம் வீடாகும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசியில் இருந்து தனது 5ஆம் பார்வையால் கன்னி ராசியையும். 7ஆம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் மகர ராசியையும் பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் 2024ஆம் ஆண்டில் எந்த ராசிக்கு மாற்றம்? யாருக்கு ஏற்றம் என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம குருவாக பயணம் செய்யும் வியாழ பகவான் ஏப்ரம் மாதம் முதல் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும். நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. உடம்பும் மனதும் புத்துணர்ச்சியடையும்.
ரிஷபம்: ஓராண்டு காலம் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்த குரு ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். குடும்பத்தில் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மிதுனம்: ஏப்ரல் மாதம் வரை லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குரு பகவானின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீடு மீது விழுகிறது. இந்த ராசிக்காரர்கள் சுக ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. மன அழுத்தங்கள் முடிவுக்கு வரப்போகிறது. சனிபகவானும், ராகு கேதுவும் சாதகமாக இருப்பதால் குரு பெயர்ச்சியை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
கடகம்: அஷ்டமத்து சனி கஷ்டங்களை கொடுத்தாலும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது. குரு பார்வையால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான பலன்களை அள்ளித்தரக்கூடியதாக உள்ளது.

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு பகவான் அமர்வது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாது. பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகுமோ என்று நினைக்க வேண்டாம். குரு பகவானின் பார்வை 2ஆமிடம், 4ஆம் இடம், 6 ஆம் இடங்களின் மீது விழுவது சிறப்பான அம்சம். குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.
கன்னி: கடந்த சில ஆண்டுகாலமாகவே சிரமத்தை சந்தித்து வரும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. அஷ்டம குருவாக பயணம் செய்யும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் அமர்வது சிறப்பானது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் வீடு, 5 ஆம் வீடுகளின் மீது குரு பகவானின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications