குரு பெயர்ச்சி பலன் 2024.. ஜெயிக்கப்போவது யாரு.. குரு பார்வையால் பதவி யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு அரியணையில் அமரப்போகும் யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான ரிஷபம் ராசிக்கு செல்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். அரசியல்வாதிகள் பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில் கோபத்தை தவிர்த்து கவனமாக பேசுவது நல்லது. அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கப்போகிறது. வியாழக்கிழமை அனுமனை வழிபடுவது நல்லது.

Guru peyarchi palan 2024: Guru peyarchi Who will win 2024 Lok Sabha Election

ரிஷபம்: ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். சுபகாரிய தடைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகம் தொழில் வியாபாரத்தில் மேலதிகாரிகள் சொல்வதை கேட்கவும். கோபப்படாதீர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பது அவசியம். திருக்கடையூர் சென்று அபிராமி அன்னையை தரிசனம் செய்து வாருங்கள். நரசிம்மர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

மிதுனம்: 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார் குரு பகவான். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பணவருமானம் நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். அரசியல்வாதிகள் எதிரிகள் விசயத்தில் கோபத்தை கட்டுப்படுத்தவும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான குரு பெயர்ச்சியாக இருந்தாலும் தலைமையில் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. பழனி முருகனை தரிசனம் செய்து வருவது நன்மையை தரும்.

கடகம்: குரு பகவான் 2024ஆம் ஆண்டு லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார். நிகழப்போகும் குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கப் போகிறது. மனதில் நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மேல் வெற்றி தேடி வரும்.
திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. கட்சித்தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். குரு பெயர்ச்சி காலத்தில் திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கன்னி: உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. பதவியில் அமரப்போகும் ராஜயோகம் வந்து விட்டது. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். தலைமேல் கேது இருப்பதால் தலைமை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+