Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: தேடி வரும் ராஜயோகம்.. நல்ல வேலை.. புரமோசன் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்லப்போகும் குரு பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி: குரு பகவான் வரும் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஒருவருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2024 Tamil: Mesham to Kadagam Who will get Job,promotion and wealth

மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீடான தன வாக்கு ஸ்தானத்திற்கு செல்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குருவின் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். பெரியோர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது. சனிக்கிழமையன்று நரசிம்மர் வழிபாடு செய்வது நன்மையை கொடுங்கும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசிக்கு குரு வருகிறது ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். குருவின் பார்வையானது 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர சந்தானம் கொடுக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும். மகான்கள் தரிசனம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். சுபகாரிய தடைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பது அவசியம். திருக்கடையூர் சென்று அபிராமி அன்னையை தரிசனம் செய்து வர நல்லதே நடக்கும்.

மிதுனம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டிற்கு வரப்போகிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பண விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான குரு பெயர்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. பழனி முருகனை மலைமீதேறி சென்று தரிசனம் செய்து வருவது நன்மையை தரும்.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கப் போகிறது. மனதில் நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். லாப ஸ்தானத்திற்கு வந்து அமரும் குரு பகவானால் சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். வண்டி வாகனம் வாங்கலாம். வீடு கட்டலாம். பணம் விவகாரங்களில் கவனம் தேவை. ரகசியம் காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மேல் வெற்றி தேடி வரும். திருச்செந்தூர் முருகனையும், குருவாயூரப்பனையும் சென்று தரிசனம் செய்து வர வெற்றி மீது வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+