குரு பெயர்ச்சி பலன் 2024: வீடு தேடி வரும் அரசாங்க வேலை.. புரமோசன் யாருக்கு தேடி வரும்
சென்னை: மே மாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது குரு பகவான் மே மாதம் 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஒருவருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். 12 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்லப்போகும் குரு பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலையும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீடான தன வாக்கு ஸ்தானத்திற்கு செல்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசிக்கு குரு வருகிறது ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். குருவின் பார்வையானது 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு மே மாதம் முதல் சம்பள உயர்வு கிடைக்கும்.
மிதுனம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டிற்கு வரப்போகிறார். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பண விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கப் போகிறது. ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வெற்றி மீது வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் முதல் பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். புரமோசனுடன் கூடிய பதவி யோகம் தேடி வரும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications