குரு பெயர்ச்சி பலன் 2024: குரு தரும் கோடீஸ்வர யோகம்.. இந்த ராசிக்காரருக்கு புரமோசன் நிச்சயம்!
சென்னை: குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சுக்கிரனின் வீட்டில் அமரப்போகும் குரு பகவானால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். யாருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் குருபகவானின் பார்வை கிடைக்கிறது. 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். குரு பகவானின் பார்வையால் வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் செய்ய வேண்டாம். நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம் என்பதால் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான குரு பெயர்ச்சியாக உள்ளது பதவி யோகம் தேடி வரும். குரு பெயர்ச்சி திருக்கடையூர், திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் வரைக்கும் குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள் விலகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் வரை குரு பகவானின் பார்வை கிடைப்பதால் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். குருவின் அனுகிரகத்தினால் பாதிப்புகள் நீங்கும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வ தரிசனம் குழப்பத்தை தீர்க்கும்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் தொட்டது துலங்கும். குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு செல்லப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் புரமோசனும் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம். திருமணம் சுபகாரியம் கைகூடி வரும். சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தால் சங்கடங்கள் நீங்கும்.












Click it and Unblock the Notifications