வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் பொங்கல் பண்டிகை - ஜனவரியில் மிஸ் பண்ணாதீங்க
மார்கழி மாதமும், தை மாதமும் இணைந்த மாதம் ஜனவரி மாதம். இந்த மாதத்தில் மிக முக்கிய பண்டிகைகளான ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தை பொங்கல் பண்டிகை, தை அமாவாசை என மிக முக்கிய விரத நாட்களும் முகூர்த்த நாட
சென்னை: முக்கிய பண்டிகைகள் நிறைந்த மாதம் மார்கழி மாதம், தை மாதம், இரண்டு மாதங்களும் இணைந்த ஜனவரி மாதத்தில் முகூர்த்த நாட்களும் விரத நாட்களும் உள்ளன. வைணவர்களுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, சைவ சமயத்தினருக்கு உகந்த ஆருத்ரா தரிசனம் தமிழ் மக்களின் தை பொங்கல் திருநாள்,முன்னோர்களை கொண்டாடும் தை அமாவாசை ஆகிய முக்கிய பண்டிகை நாட்கள் உள்ளன. இந்த நாட்களை உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பண்டிகை நாட்களை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.

ஜனவரி 1 புதன்கிழமை தனுர் மகா வியாதீபாதம் - மகாலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள் வியாதிபாத ஸ்நானம் செய்யலாம் சஷ்டி விரதம் இருக்கலாம்.
ஜனவரி 6 திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவிலுக்கு போய் வணங்கலாம் கிருத்திகை விரதம்
ஜனவரி 7 செவ்வாய்கிழமை கூர்ம துவாதசி சொர்க்கவாசல் வழியாக சென்று இறைவனை தரிசிக்கலாம்
ஜனவரி 10 ஆருத்ரா தரிசனம் பௌர்ணமி பூஜை - சிவ ஆலயங்களுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்யலாம்
ஜனவரி 12 கூடாரவல்லி - பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாளை தரிசனம் செய்ய கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
ஜனவரி 13 திருமங்கை மன்னன் வேடுபறி - சங்கடஹர சதுர்த்தி
ஜனவரி 15 தை திருநாள் உத்தராயண புண்யகாலம் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை
ஜனவரி 16 மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 காணும் பொங்கல்
ஜனவரி 20 சபலா ஏகாதசி
ஜனவரி 24 வெள்ளிக்கிழமை தை அமாவாசை சர்வ அமாவாசை முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நாள்.
ஜனவரி 26 ஞாயிறு கிழமை சந்திர தரிசனம் வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்
ஜனவரி 28 செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நாள் கடன் அடைக்க ஏற்ற நாள்
ஜனவரி 29 புதன்கிழமை வசந்த பஞ்சமி இறைவனை வழிபட நல்ல நாள்.
ஜனவரி மாத முக்கிய முகூர்த்த நாட்கள்
ஜனவரி 20, தை 6 திங்கள் கிழமை ஏகாதசி திதி அனுசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 6 - 7.30 மகர லக்னம்
ஜனவரி 27, தை 13 திங்கள் கிழமை திரிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 6 - 7.30 கும்பம் லக்னம்
ஜனவரி 30, தை 16 வியாழன்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 7.30 - 9 கும்பம் லக்னம்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications