ஜூன் மாத ராசி பலன் 2022..எந்த ராசிக்காரரின் வீட்டை அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது தெரியுமா?
ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு நிதானமும் கவனமும் தேவைப்படும் என பார்க்கலாம். தனுசு மற்றும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு கல்யாண யோகம் கை கூடி வரும். ஜூன் மாதம் தனுசு மற்றும் மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார், ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் தனுசு மற்றும் மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. நான்காம் வீட்டில் குரு ஆட்சி பெற்று செவ்வாயுடன் இணைந்துள்ளது சிறப்பு. சுகமும் சந்தோசமும் நிறைந்த மாதமாகும். பிரச்சினைகளை எளிதில் எதையும் கையாளுவீர்கள். அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பலவீனங்கள் நீங்கி பலம் அதிகரிக்கும். புது வீடு மாற வாய்ப்பு உள்ளது. இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். சொன்னதை செய்யும் காலம் கை கூடி வந்துள்ளது. எதிர்பார்த்த சுப காரியங்கள் கை கூடி வரும். புதன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் உள்ள புதனோடு இணைகிறார். காதல், கல்யாணம் போன்ற விஷயங்களில் நிதானம் அவசியம். பொறுமையோடு யோசித்து செயல்படுங்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை
ஐந்தாம் வீட்டில் உள்ள ராகு மீது சனியின் பார்வை விழுகிறது. வயிறு தொடர்பான பிரச்சினைகள், வாய்வு தொந்தரவுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாத பிற்பகுதியில் சூரியன் இடப்பெயர்ச்சி உங்கள் ராசியை பார்வையிடுவதால் பலம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கை கூடி வரும். வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு நினைத்தது கைகூடும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைவீர்கள். மொத்தத்தில் இந்த ஜூன் மாதம் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு நிம்மதியும் மன மகிழ்ச்சியும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

மகரம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..உங்களுக்கு கடந்த சில மாதங்களாகவே தடைகள், பிரச்சினைகள் அதிகம் கொண்ட மாதமாக அமைந்துள்ளது. காரணம் ஏழரை சனிதான். வாக்கு ஸ்தானத்தில் சனி வக்ரமடைந்து பயணம் செய்கிறார். உங்களின் கடந்த கால சம்பவங்களை மறந்து விடுங்கள். நல்ல எண்ணங்கள் நேர்மறை எண்ணங்கள் இனி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்ற குரு செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். நான்காம் வீட்டில் குரு ராகு உடன் பயணம் செய்கிறார். ஐந்தாம் வீட்டில் புதன் சூரியனுடன் இணைந்து பயணம் செய்வதால் மாணவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சங்கடங்கள் நீங்கும்
பதவியில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. வார்த்தைகளை கொட்டி விட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம். வீடு சொத்துக்களில் முதலீடுகள் செய்யலாம். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளின் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். தியானம் பழகுங்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மையே நடக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications