ஜூன் மாத ராசி பலன் 2022..காதல்..கல்யாண யோகம்..கெட்டி மேளம் கொட்டப்போகும் ராசிக்காரர்கள் யார்?
ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் கைகூடி வரும்.. விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு கல்யாண யோகம் கை கூடி வரும். ஜூன் மாதம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார், ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

நிதானம் தேவை
விருச்சிக ராசிக்காரர்களே ராசிநாதன் செவ்வாய் உடன் குரு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கும் மாதம். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும் வண்டி வாகனங்கள் வாங்கலாம். நற்காரியங்களுக்காக முயற்சி செய்யலாம். சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன விவாதங்கள் வந்து செல்லும். 15ஆம் தேதிக்கு மேல் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு செல்கிறார். எட்டாம் வீட்டிற்கு சூரியன் செல்வதால் நிதானமாக செயல்பட வேண்டும். அலுவலத்தில் மேலதிகாரிகளால் சில தொந்தரவுகள் வரலாம் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

வேலை கிடைக்கும்
நவ கிரகங்களின் யோகங்கள் உங்களுக்கு இந்த மாதம் செயல்பட ஆரம்பிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்று உங்கள் ராசியை பார்வையிடுகிறார். மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுக்கிரன் புதனோடு இணைந்து பயணம் செய்வதால் புதிய வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும்.

கல்யாண யோகம் வந்துருச்சு
திருமண சுபகாரியம் தொடர்பாக முயற்சி செய்யலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். புது காதல் உருவாகும். காதல் கனிந்து திருமணத்தில் முடியக்கூடிய நேரம் கை கூடி வருகிறது. இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கை கூடி வரப்போகிறது.

மாணவர்களுக்கு அற்புதம்
மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக உள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அற்புதமாக கூடி வந்துள்ளது. புதன், சுக்கிரன் பார்வையும், குருவின் பார்வையும் கைகொடுக்கப்போகிறது. மூன்று கிரகங்களின் பார்வையும் கிடைப்பது சாதகம். நான்காம் வீட்டில் சனி ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டகரமான மாதம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வண்டி வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தவும். கழுத்து, கைகளில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் என்றாலும் எளிதில் சரியாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications