கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்.. வீடுகள் தோறும் கோலாகல கொண்டாட்டம்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோகுலாஷ்டமி விழாவாக இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 7 வயது வரை பிருந்தா வனத்திலும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் தங்களின் இல்லங்களில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். கிருஷ்ணன் போல வேடமிட்டும் ராதை போல வேடமிட்டும் ஜென்மாஷ்டமி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். கண்ணனும் ராதையும் வீடுகள் தோறும் உலா வருவதை நீங்களும் பார்த்து ரசித்து வாழ்த்து கூறுங்கள்.
E. வெற்றிச்செல்வன்

L.A மித்ரா யாதவ்

S. ஷிருத்திகா

அமிர்தயாழினி

அர்ஜூன்

ஆர். சுகிர்தன்

கிருஷ்ணன்

கிருஷ்ணா

கே.எஸ். வர்னிகா

தரண்

தான்யஸ்ரீ , சிவ கார்த்திக்கேயன்

விஷ்வா

ஜெய் ஷிருதிக்













Click it and Unblock the Notifications