காதல் மணி யாருக்கு ஒலிக்கும்..யாருக்கு காதல் ராசியிருக்கு? கல்யாணம் வரை கூட வருமா?
சென்னை: ஆணோ பெண்ணோ சிலரை பார்த்த உடனே மனதிற்குள் பூ பூக்கும், தலைமேல் பல்பு எரியும், சிலருக்கு மணியடிக்கும். சில ராசிக்காரர்களுக்கு பார்த்த உடனேயே காதல் வரும். சில ராசிக்காரர்களுக்கு காதல் பற்றிக்கொள்ள நாள் ஆகும். சில ராசிக்காரர்களுக்கு காதல் வந்தாலும் அது கைகூடாது. நமக்கெல்லாம் காதல் ராசியே இல்லை என்று சில ராசிக்காரர்கள் புலம்புவார்கள். காதல் கிரகங்கள் செய்யும் மாயத்தையும் யாருக்கெல்லாம் காதல் கை கூடி வரும் என்றும் பார்க்கலாம்.
காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும்.துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெறுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன. காதல் மலர்வதற்கு மனசு முக்கிய பங்குவகிக்கிறது.மனதுக்கு காரகர், உடல் காரகர், மனதில் சஞ்சலத்தை தருபவர் சந்திரன். ராகு ஒரு தலைக்காதல் காரகன்.
காதலில் துணிவான முடிவெடுக்க உதவுபவர், தைரியத்துக்கு காரகர் செவ்வாய். காதல் வெற்றி பெற உதவி தோவை. காதலுக்கு இனம் புறியாத பாசத்திற்கும், இன்பத்திற்கும்.ஆடம்பரம் அழகு, எதிர்பாலினத்தை ஈர்க்கும் சக்தியை தருபவர், வசீகரத்தின் காரகர் சுக்கிரன். ஒருவரின் ஜாதகத்தில் காதல் கிரகங்களான சுக்கிரனும் செவ்வாயும் 5பாவகத்துடன் தொடர்பு ஏற்பட்டால் காதல் மலரும். இந்த கிரகங்கள் ஏழாம் அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த காதல் திருமணத்தில் முடியும். ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு.
ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும். எனவேதான் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களின் மகளுக்கோ மகனுக்கோ காதல் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்குமா என்று கேட்கிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். இது மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் ஐந்தாமிடம் வேலை செய்ய வேண்டும்.
ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7ஆம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11ஆம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும்.
பிறந்த ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது. அல்லது அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது அல்லது ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதி பார்வை பெறுவது அல்லது ஏழாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது, ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஏழாம் அதிபதி இருப்பது காதல் திருமணம் அமையும்.
பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் அதிபதிக்கும், ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும். களத்திரக்காரனாகிய சுக்கிரன், ஏழாம் அதிபதிகளை சனி பார்த்தால்,சுக்கிரன், சனி ஏழாம் இணைந்திருந்தால் காதல் திருமணம். லக்கினத்திற்கு 1 5 9 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதும். சந்திரன், சுக்கிரன் இணைந்து நீர் இருந்தாலும் காதல் திருமணம். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.
சனி அவமானத்தையும், முறையற்ற காதலையும், தாமதத்தையும் தருவார். குழப்பம், திடீர் முடிவுகள், ஒருவரை அடைய மாந்திரீக செய்வினை செயல்கள் செய்ய வைப்பார் சனி பகவான். மதம் மாறிய, குலம் மாறிய வழக்கத்துக்கு மாறான அனைத்து திருமணங்களுக்கு காரகர் ராகு புதன் -ராகு காதல் தடை ஏற்படுத்தும். ஒரு தலைக்காதல். சட்டரீதியாக திருமணம், பதிவு திருமணம், காதல் உருவாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மாற்றும் கேது காரகர். உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்து காதல் உங்களுக்கு சரிப்பட்டு வருமா? என்று முடிவு செய்யவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications