For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரகிரகணம்: யாருக்கு தோஷம்? என்ன பரிகாரம் செய்வது?

ஹேவிளம்பி வருடம் தை 18 இன்று தை பூசம் தினத்தன்று மாலை பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி ஆயில்யம் நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் கடக ராசியில் சந்திரகிரகணம் முடிவடைகிறது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?- வீடியோ

    சென்னை: இன்று ஹேவிளம்பி வருஷம் தை 18 புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது.

    வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரகணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.

    சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி. இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரத்தில் தியானம் செய்யலாம். கிரகணம் முடிந்த உடன் பரிகாரம் செய்யலாம்.

    கடக ராசியில் சந்திரன்

    கடக ராசியில் சந்திரன்

    சந்திர கிரகணம் ஆரம்ப காலம் மாலை 5.16 க்கு மத்திய காலம் இரவு மணி 6.58 க்கு சந்திர கிரகண இரவு 8.40 க்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் கடகத்தில் ராகு உடன் சந்திரன் அமர்ந்திருக்க பூசம் நட்சத்திரத்தில் இருந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கும் நேரத்தில் நிகழ்கிறது.

    பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்

    பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்

    புதன் கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதே போல, புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

    ராகு - கேது

    ராகு - கேது

    ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். இன்றைய தினம் கடகத்தில் சந்திரன், ராகு அமர்ந்திருக்க மகரத்தில் சூரியன் கேது அமர்ந்துள்ளனர்.

    கிரகங்களினால் கிரகணம்

    கிரகங்களினால் கிரகணம்

    எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரகணம் நிகழும் என கூறியுள்ளனர்.

    சந்திர தரிசணம்

    சந்திர தரிசணம்

    மாலை முதல் சந்திர கிரகணம் முடியும் வரையில் உணவு சாப்பிடக்கூடாது. சிரார்த்தம் மறுநாள் பெளர்ணமி திதியில் செய்ய வேண்டும்.
    கர்ப்பம் அடைந்த பெண்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.50 வரையில் சந்திரனை பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர். இரவு 9.00 மணிக்கு மேல் சந்திர தரிசனம் செய்யலாம்.

    பூஜை செய்ய நல்ல நேரம்

    பூஜை செய்ய நல்ல நேரம்

    ஊருகாய், தயிர், தண்ணீர், உணவுப்பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைக்கலாம். கிரகணம் முடிந்த பின்னர் இரவு மணி 9.40 க்கு ஆலயம் வீடு சுத்தம் செய்து குளித்து விட்டு அவரவர் சம்பிரதாயப்படி பூஜை செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் காளஹஸ்தி ஆலயம் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Rahu/Ketu engulfs the Moon on an Lunar Eclipse or Chandra Grahan. Grahan is considered to bring bad fate and harmful effects to a person’s life. To minimise its ill effects holy Mantras are recited that is expected to bring positive energy in a person’s life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X