For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களே... கணவர் உங்களை சுத்தி சுத்தி வரணுமா? மாகாளி கிழங்கு ஊறுகாய் செஞ்சு கொடுங்க!

ஜோதிடத்தில் காரமான ஊறுகாயின் காரகர் யார் தெரியுமா? இன்றைய நாயகன் செவ்வாய்தாங்க.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உங்கள் கணவர் 'அந்த விஷயத்தில்' ஆர்வம் காட்டாமல் இருக்கிறாரா? அல்லது விரைவில் சோர்ந்துவிடுகிறாரா? அவருக்கு தினமும் இந்த மாகாளி கிழங்கு ஊறுகாய் கொடுத்துப்பாருங்க! அப்புறம் சும்மா... நீங்களே அசந்து போவிங்க.

செவ்வாய்கிழமையான இன்று நாம் பார்க்க போகும் ஊறுகாய்க்கு செவ்வாய்க்கும் நிறைய தொடர்பு உள்ளது. இந்த ஊறுகாய் பற்றி தெரிந்தால் அசந்து போவது மட்டுமல்ல! அந்த ஊறுகாய்க்கு நீங்களே அடிமையாகவே ஆகிவிடுவீர்கள்.

குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டனர்

குறிஞ்சி கடவுள் முருகன்

குறிஞ்சி கடவுள் முருகன்

காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷம் மலையும் மலை சார்ந்த பகுதியை குறிப்பதாகும் இதன் அதிபதி செவ்வாயாகும். செவ்வாயின் அதிதேவதை நம்ம குறிஞ்சி கடவுள் முருகனே தாங்க! அத்தகைய மலை பகுதிகளில் விளையும் ஒரு கொடி வகை தாவரம்தான் "ஸர்ஸாபைருல்லா" என்பதாகும். இந்த ஸர்ஸாபைருல்லா செவ்வாயின் காரகம் நிறைந்த தாவரம் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

சோரியாசிஸ்

சோரியாசிஸ்

சோரியாசிஸ் என்பது தோல் சிவந்து தடித்து காணப்படும். தோலின் மீது வெண்மையான பளபளப்பான மீன் செதில் போன்று உதிர ஆரம்பிக்கும் இதை மீன் செதில் படை என்று கூறுவார்கள். தோலின் வளர்ச்சி அபரிதமாக இருந்து அதனால் தோல் தடித்தும் இறந்த செல்களினால் மீன் செதில் போன்றும் உதிரும்.

தோல் நோய் மற்றும் சொரியாஸிஸ் ஏற்படுவதற்க்கு முக்கிய கிரகம் செவ்வாயாகும். சொரியாஸிஸ் மற்றும் பலவித தோல் நோய்களுக்கு ஸர்ஸாபைருல்லா சிறந்த மருந்து என உலகளவில் போற்றப்படுகிறது.

ரத்தகொதிப்பு

ரத்தகொதிப்பு

ரத்த கொதிப்பு ஏற்பட காரக கிரகம் ரத்தத்தினை குறிக்கும் செவ்வாய்தாங்க! ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இந்த ஸர்ஸாபைருல்லா ஊறுகாய் சாப்பிட்டால் சரியாகும் என்கிறது ஆயுர்வேதம். அதை காயவைத்து தேநீராக உலகின் பலபகுதிகளில் அருந்துகிறார்கள்.

கணவனை கைக்குள் வைக்க

கணவனை கைக்குள் வைக்க

ஓரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் செவ்வாய் கெட்டிருந்தால் கணவர் "அதுக்கெல்லாம் சரிபட்டுவரமாட்டார்"

இது பெண்களுக்கான ரகசியம். யாரிடமும் கூறிவிடாதீர்கள். உங்கள் கணவர் 'அந்த விஷயத்தில்' ஆர்வம் காட்டாமல் இருக்கிறாரா? அல்லது விரைவில் சோர்ந்துவிடுகிறாரா? அவருக்கு தினமும் இந்த ஸர்ஸாபைருல்லா ஊறுகாய் கொடுத்துப்பாருங்க!

மாகாளிக்கிழங்கு

மாகாளிக்கிழங்கு

என்னது? ஸர்ஸாபைருல்லான்னு கேட்டா யாருக்கும் தெரியவில்லையா? அப்படீன்னா சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, பனகல் பார்க் பகுதி,திருச்சி மலைவாசல், ஆண்டார் வீதி போன்ற இடங்களில் "மாகாளிக்கிழங்கு" என்று கேட்டுப்பாருங்கள். தெரியாதவர்களே இருக்க முடியாது.

ஊறுகாய் செய்யலாம்

ஊறுகாய் செய்யலாம்

இந்த மாகாளிக்கிழங்கு ஊறுகாய் சாப்பிடவேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக லக்னத்திலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்று சந்திர சேர்க்கை பெற்று இருக்க வேண்டும்.

மாகாளிக்கிழங்கு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

மாகாளிக் கிழங்கு - அரை கிலோ
லேசாகப் புளித்த தயிர் - ஒன்றரை கப்
மிளகாய்வற்றல் - 15
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்பொடி - 2தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை

செய்முறை

ரத்த விருத்தி செய்யும் இந்த மாகாளிக் கிழங்கின் வித்யாசமான மணம் பலருக்கு பிடிக்காது. இளசான மாகாளிக் கிழங்கை வாங்கி 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு தேய்த்து அலம்பவும்.

அதன் மேல் தோலை கத்தியால் சீவி, அதை இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் தண்டை நீக்கவும். மீதமுள்ள கிழங்கை பொடியாக நறுக்கவும். கறுக்காமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்கவும்.

கால் கப் தயிருடன் மிளகாய் வற்றல், கடுகு,மஞ்சள்பொடியை நைசாக அரைக்கவும். மீதமுள்ள தயிருடன் அரைத்த விழுதைக் கலக்கவும்.

நறுக்கிய மாகாளித் துண்டங்களை ஒரு ஜாடியில் போட்டு, உப்பைப் போட்டு கலந்து வைக்கவும். அத்துடன் மிளகாய் விழுது கலந்த தயிரைக் கலக்கவும். மருத்துவ குணம் கொண்ட மாகாளிக் கிழங்கு ஊறுகாய் தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

எங்கே கிளம்பிட்டீங்க... மாகாளி கிழங்கு வாங்கி ஊருகாய் போடவா? ஜோதிடத்திற்கும் உணவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் கிரங்களின் அமைப்பைப் பொறுத்து அவருக்கு என்ன மாதிரியான உணவு பிடிக்கும் என்பதை கூறி விடலாம்.

இன்றைய தினம் ஜோதிட கட்டுரையில் செவ்வாய் காரகத்திற்கு உரிய ஊறுகாய் பற்றி சொன்னதும் அதனால்தான் நேயர்களே!

English summary
maahaali kizhangu pickle was quite like a summer without mangoes.Maahaali kizhangu is believed to have medicinal properties and is supposed to be good for the liver as it has blood-purifying qualities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X