வைகையில் இறங்க வரப்போகும் கள்ளழகர் - களைகட்டப்போகும் மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரைத் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற உள்ளது. அழகர்கோவிலில் இருந்து வைகையில் இறங்க வரப்போகிறார் கள்ளழகர்.
மதுரை: எத்தனையோ திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தனிச்சிறப்பு உண்டு. மதுரை குலுங்க குலுங்க அமர்களப்படுத்திவிடுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு மீனாட்சி திருக்கல்யாணத்தையும், கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடப்போகிறார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
சித்ராபவுர்ணமியை ஒட்டி மதுரையில் 12 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரைக்கும் மீனாட்சி அம்மன் கோவிலிலும், கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து இறங்கி வருவது முதல் எதிர்சேவை, வைகையில் இறங்குவது மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பது... தசாவதார கோலத்தில் அருள்பாலித்து விட்டு பூப்பல்லாக்கில் மலைக்கு கிளம்புவது வரைக்குமே 15 நாட்களும் விழாக்கோலமாக இருக்கும்.
சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பங்குனியிலேயே ஆரம்பமாகிவிடும். இந்த ஆண்டு மாசி மாதமே பந்தல் போடுவதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

கொடியேற்றம்
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 5 தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
தினமும் காலையிலும் மாலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக மாட வீதிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

மீனாட்சி ஆட்சி
சித்திரை மாதம் முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி ஆரம்பமாகிவிடும். மதுரையை அரசாளும் மீனாட்சிக்கு வைரகிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடப்பதைக்காண கண்கோடி வேண்டும். வேப்பம்பூ மாலை சூடி மதுரையை அரசாட்சி செய்வார் அன்னை மீனாட்சி. இந்த ஆண்டு பட்டாபிஷேகம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அன்று மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.

மீனாட்சி திருக்கல்யாணம்
பட்டத்தரசியாக மீனாட்சி அம்மன் திக்விஜயம் சென்று எட்டு திக்கும் வென்று கயிலாயம் சென்று சிவபெருமானைப் பார்த்து காதல் வயப்பட சுந்தரேஸ்வரராக மாறி மதுரைக்கு வந்து மணம் புரிந்து கொள்கிறார்.
இந்த ஆண்டு பத்தாம் நாள் திருவிழாவான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களின் தாலிக்கொடியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொள்வது இந்த விழாவின் சிறப்பம்சம். தம்பதி சமேதராக மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தால் கல்யாணம் கூடி வரும் என்பது நம்பிக்கை.

சித்திரை தேரோட்டம்
15ஆம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. நான்கு மாசி வீதிகளில் சுவாமிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்கள். மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 16ஆம் தேதி நிறைவடையும் நிலையில், தொடர்ந்து அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சார்பில் 15ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது.

வராரு வராரு அழகர் வராரு
கடந்த 2 ஆண்டு காலமாகவே அழகர் மலையிலேயே விழாக்கள் அனைத்தும் நடைபெற்றன. இந்த ஆண்டு கண்டாங்கி புடவை கட்ட கள்ளழகர் மதுரைக்கு வரப்போகிறார். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு அழைக்க மதுரை மக்கள் தயாராகி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக்காண லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 16ஆம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மதுரை குலுங்க... குலுங்க...
ஏப்ரல் 17 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபத்தில் காலையில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி கருட வாகனத்தில் காட்சி அளிக்கிறார். பிற்பகலில் மண்டூக மகரிஷி மோட்சம் தருகிறார். இரவு தசாவதார கோலத்தில் ராமராயர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை காலை மோகனாவதாரம் இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். ஏப்ரல் 19 கள்ளழகர் அழகர்மலைக்கு திரும்புகிறார். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications