மகாசிவராத்திரி நாளில் கிரகங்களின் அற்புத சேர்க்கை: எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்
மகாசிவராத்திரி நாளில் நவகிரகங்களின் அற்புத சேர்க்கை நிகழ்கிறது. மகர ராசியில் மாலை வரை ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன.
சென்னை: நவகிரகங்களின் சஞ்சாரத்தால் மனிதர்களுக்கு நன்மை தீமைகள் நடைபெறுகின்றன. நவகிரகங்களின் சேர்க்கை பார்வை நகர்வு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை கொடுக்கின்றன. மகாசிவராத்திரி தினமான இன்று மகர ராசிகளில் நான்கு முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. கும்ப ராசியில் அதே போல மூன்று முக்கிய கிரகங்கள் இணைந்துள்ளன.
மகாசிவராத்திரி நாளில், சனி பகவானின் ராசியான மகர ராசியில், சனி, புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய ஐந்து கிரகங்களும் சஞ்சரிப்பார்கள். சூரியனும் குருவும் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்கள். மாலைக்கு மேல் சந்திரன் கும்ப ராசியில் இணைகிறார்.
மகாசிவராத்திரியில் சிவ பெருமானின் பேரருள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.எந்த ராசிக்காரர்கள் என்ன பொருட்களால் சிவபெருமானை அபிஷேகம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம் லாபங்கள் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடும் போது சிவப்பு சந்தனம் அபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். இதனால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்
சந்திரன் உள்ளிட்ட கிரகங்களின் சேர்க்கை சில பாதிப்புகளை சரி செய்யும். உங்களின் தர்ம கர்ம ஸ்தானங்களில் கிரகங்கள் கூடியுள்ளன. உங்களின் வேலை தொழிலில் சிறப்பான நிலை ஏற்படும். மகாசிவராத்திரி நாளில் கரும்புச்சாறு மற்றும் பால் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது விசேஷமாகும். இவ்வாறு செய்வதால், சிவ பெருமானின் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களில் முக்கிய கிரகங்கள் அஷ்டம ஸ்தானத்தில் கூடியுள்ளன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாக்ய ஸ்தானத்திலும் மூன்று கிரகங்கள் இணைவதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணமும் லாபமும் கிடைக்கும், இதன் காரணமாக நிதி நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கௌரவம், பதவி உயர்வு இருக்கும். மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வில்வ அர்ச்சனை செய்ய மறக்காதீர்கள்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. ராசிக்கு ஏழாவது வீட்டிலும் எட்டாவது வீட்டிலும் கிரகங்கள் இணைந்துள்ளன. வேலை மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காணலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். கிரகங்களின் பார்வை உங்கள் ராசி மீது படுகிறது. பதவி உயர்வு அல்லது நிதிப் பலன்களுக்கான வாய்ப்புகளும் இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இன்றைய தினம் பழங்களால் அபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் கிரகங்கள் கூட்டணி இணைந்துள்ளதால் நோய் நொடியற்ற வாழ்க்கை உண்டாகும். குடும்ப உறவுகளில் இனிமை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழிலில் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்கும். சந்தன அபிஷேகம் செய்து வழிபடலாம். மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

கன்னி
உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி நாதனுடன் கிரகங்கள் இணைந்துள்ளன. ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். சொந்த பந்தங்களின் வருகை அதிகரிக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் நடைபெறும். மகாசிவராத்திரி தினமான இன்று சிவனின் நான்கு கால அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தரலாம்.

துலாம்
நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கிரகங்கள் கூடியுள்ளன. சுகமான நாட்களாக அமையப்போகிறது. வீடு மனை வாங்குவதற்கான யோகங்கள் தேடி வரும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மகாசிவராத்திரி அன்று சிவ பெருமானின் பூஜையில் தேனை சேர்த்துக்கொள்வது விசேஷ பலன்களைத் தரும்.

விருச்சிகம்
மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் நான்கு கிரகங்களும், சுக ஸ்தானத்தில் மூன்று கிரகங்களும் இணைந்துள்ளன. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்றைய தினம் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மல்லிகைப்பூக்கள் அலங்காரத்திற்கு வாங்கித்தரலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டிலும் மூன்றாம் வீட்டிலும் கிரகங்கள் கூடியுள்ளன. இந்த நாட்களில் நீங்கள் மன அமைதியை நாட இறைவழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. பேசும் போது நிதானத்தை தவற விட வேண்டாம். பணம் அதிகம் வரும் சேமிப்பும் உயரும். மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய மன குழப்பங்கள் நீங்கும்.

மகரம்
மகர ராசியிலே நான்கு கிரகங்கள் கூடியுள்ளதால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.சிவபெருமானின் அருள் கிடைக்க மகாசிவராத்திரி நாளில் பால் அபிஷேகம் ருத்ராபிஷேகம் செய்யலாம். சாமந்தி மலர்களால் அபிஷேகம் செய்யலாம். இதன் மூலம் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்கள் ராசியிலும் விரைய ஸ்தானத்திலும் கிரகங்கள் கூடியுள்ளன. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். கூடவே திடீர் பண வரவும் வரும். மனதில் ஏற்பட்ட பாரங்கள் நீங்க சிவபெருமானுக்கு பாலும் பன்னீரும் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். தும்பை பூக்களால் அர்ச்சனை செய்ய வாங்கித்தரலாம்.

மீனம்
லாப ஸ்தானத்தில் கிரகங்கள் இணைந்துள்ளன. இது உங்களுக்கு சாதகமாக இருக்கும். பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம். உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை தொழிலில் புரமோசன் கிடைக்கும். பணியிடத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சந்திரன், சூரியன், குருவின் சஞ்சாரம் விரைய ஸ்தானத்தில் உள்ளது என்றாலும் பணம் வருவதற்கான புதிய வாய்ப்புகள் அமையும். சுப செலவுகள் தேடி வரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications