Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்ச் மாத ராசி பலன் 2021: இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும்

மார்ச் மாதத்தில் சூரியன் சுக்கிரன் கூட்டணி கும்பம், மீனம் ராசியில் பயணிக்கின்றன. இந்த மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்ச் மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும் மீனம் ராசியிலும் பயணம் செய்கிறார். கும்பம் ராசியில் உள்ள சுக்கிரன் இந்த மாதத்தில் மீனம் ராசியில் உச்சமடைகிறார். புதன் இந்த மாத இறுதியில் மீனம் ராசியில் நீசமடைகிறார். உச்சமடைந்த சுக்கிரனுடன் இணைந்த புதன் நீசபங்கமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கும்பத்தில் சூரியன், சுக்கிரன், குரு, சனி, புதன் மகரம் ராசியில் சஞ்சரிகிறார். செவ்வாய் ரிஷபம் ராசியில் ராகு உடன் பயணிக்கிறார். கேது விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

இந்த மாதத்தில் கிரகங்களின் மாற்றத்தை பார்த்தால் 11ஆம் தேதி புதன் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசியில் பயணம் செய்கிறார். மார்ச் 16ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். மார்ச் இறுதியில் புதன் சூரியன், சுக்கிரன் உடன் இணைந்து நீசபங்கமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தையும் திடீர் பண வரவையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் சூரியன் மாத தொடக்கத்தில் எழாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியின் மீது பார்வை விழுகிறது. உங்களுடைய ராசிக்கு சுக்கிரன் பார்வையும் கிடைக்கிறது. நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்த நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். சனி, குரு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் முதலீடுகள், சொத்து வாங்க கடன்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் ராகு உடன் இணைந்து பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பெற்றோர்களின் உதவி கிடைக்கும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய சொத்துக்கள் சேரும். மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் திடீர் பயணங்கள் உண்டாகும். திடீர் விரைய செலவுகள் வரும். சுப செலவுகள் அதிகம் உண்டாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த வாரம். சுக்கிரன் உச்சமடைவதால் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். உயரதிகாரிகளிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து விடவும். மாணவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மார்ச் மாத பிற்பகுதியில் திருமணம் சுப காரிய பேச்சுவார்தைகள் தவிர்த்து விடவும். இந்த மாதம் உங்கள் ராசிக்கு மார்ச் 13 ஆம் தேதி மாலை 05.56 மணி முதல் மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 04.43 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை மவுன விரதம் இருப்பது நல்லது.

கன்னி

கன்னி

சவால்களை சந்தித்து சாதனைகளாக மாற்றக்கூடியவர்கள் கன்னி ராசிக்காரர்கள். உங்க ராசிநாதன் புதன் மாத துவக்கத்தில் குரு, சனி, உடன் இணைந்து பயணம் செய்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். திருமணம் சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் பண விரயம் உண்டாகும். புதன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். மாத பிற்பகுதியில் உச்சம் பெற்ற சுக்கிரன் உங்க ராசியினை பார்வையிடுவதால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். திருமண சுப காரியங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் கைகூடி வரும். கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். அலைச்சலும் மன உளைச்சலும் நீங்கும். குடும்பத்தில் கார சார விவாதங்களை தவிர்த்து விடவும். நோய் பாதிப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திடீர் வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பயம் பதற்றம் முடிவுக்கு வரும். இந்த மாதத்தில் கிரகங்களின் நகர்வு உங்களின் சிக்கல்களை தீர்க்கும். மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 04.43 மணி முதல் மார்ச் 18ஆம் தேதி மாலை 05.22 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமும் நிதானமும் தேவை. புதிய முடிவுகளை தள்ளி வைக்கவும். பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் கிரகங்களின் பார்வையால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். திருமணம் சுப காரிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். திருமணம் சுப காரியம் சில தடைகளை தாண்டி முன்னேற்றத்தை தரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்க்காத பண விரையம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும். சிலருக்கு திடீர் புரமோசன் கிடைக்கும். நெருப்பு விசயங்கள், மின் சாதனங்களில் கவனமாக இருக்கவும். வெளியூர், வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று 12ஆம் வீட்டை பார்வையிடுவதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பெரிய அளவில் முதலீடுகளை தவிர்க்கவும். மார்ச் 18ஆம் தேதி மாலை 05.22 மணி முதல் மார்ச் 21ஆம் தேதி காலை 06.08 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். தொழில் வியாபாரங்களில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. எதையும் வெளிப்படையாக பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். கிரகங்களின் கூட்டணி சாதகமாக உள்ளது. நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் புரமோசனும் இடமாற்றமும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் வியாபார விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சில நேரங்களில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக வேண்டும் என்று நினைத்த ஊருக்கு குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்வீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் உதவியும் நட்பும் கிடைக்கும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு திறமை பளிச்சிடும் பள்ளிகளில் ஆசிரியர்களின் அன்பான அக்கறையான கனிவான கவனிப்பு கிடைக்கும். உங்களின் தசாபுத்தி காலம் எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யும். மார்ச் 21ஆம் தேதி காலை 06.08 மணி முதல் மார்ச் 23ஆம் தேதி மாலை 04.30 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதை தவிர்த்து விடவும். பேச்சிலும் செயலிலும் இரண்டு நாட்களுக்கு நிதானம் அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+