• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் - 12

Google Oneindia Tamil News

திருப்பாவை -12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

Margazhi masam : Tirupavai, Tiruvempavai songs - 12

பாடல் விளக்கம்:

இந்தப் பாடலில் உறங்கும் தோழியின் வீட்டு வாசலை எருமைகள் பால் சொரிந்து சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம்

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய மாடுகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. தாய் மாடு கன்றுக்குட்டியை நினைத்து பாலை பொழிவதால் தரையானது சேறாகிவிட்டது. வீட்டு வாசல்களை சேறாக்கும் அளவுக்கு விடாமல் பால் சொரியும் மாடுகளுக்குச் சொந்தக்காரனான ஆயர்பாடியில் வசிக்கும் செல்வந்தனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம் என்று தோழியர் எழுப்புகின்றனர்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் உறங்கிக்கொண்டிருக்கின்றாய். ஆயர்பாடியில் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?என்று கேட்கின்றனர்.

கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய அதிகாலையில் எழுந்து இறைவனின் புகழைப் பாடுகின்றனர். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

திருவெம்பாவை - 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

பாடல் விளக்கம் :

தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான்.

நம்மைப் பிணைக்கின்ற இந்த பிறவித் துயரைப் போக்கும் பொருட்டு , நம்மால் கொண்டாடப்படும் தூய்மையான இறைவன், வானத்தையும், உலகத்தையும், மற்ற எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், மறைத்தும், தில்லைச் சிற்றம்பலத்தில் அக்னியைக் கொண்டு ஆடும் கூத்தன்
நம் தலைவனான சிவபெருமானின் பொற்பாதத்தை வணங்கி அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம" என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம் என்று இறைவனின் பெருமையை கூறுகின்றனர். நிலம், நீர், ஆகாயம் , நெருப்பு, காற்று ஆகிய பஞ்ச பூதங்களையும் தன்னுள் அடக்கி , படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நிற்க வேண்டும் என்று இந்த பாடலின் மூலம் உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

English summary
Margazhi month on December 21,2021 Thirupavai and Thiruvempavai has begun in the Vishnu and Siva temples all over Tamil Nadu. here is the song of Tirupavai and Tiruvempavai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X