அக்டோபர் மாத ராசி பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு காதல் இனிக்கும்!..மகிழ்ச்சி அதிகரிக்கும்!!
சென்னை: அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதமாக அமையப்போகிறது. கோடி கோடியாக சொத்து இருந்தாலும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.
அக்டோபர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசியில் உள்ள செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது உள்ளது. சூரியன் பாதி நாட்கள் கன்னி ராசியிலும் பின்னர் துலாம் ராசியிலும் பயணம் செய்வார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
ரிஷப ராசிக்கு கிரகங்களின் பயணத்தை பார்த்தால் ராசியில் செவ்வாய், 5ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், ஆறாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குரு, 12ஆம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாத பிற்பகுதியில் செவ்வாய் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுக்கிரன், சூரியன் ஆறாம் வீட்டிற்கு பயணம் செய்கின்றனர்.

வெற்றிகரமான மாதம்
உங்கள் யோக காரகன் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். மனநிலையில் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். வேலை விசயமாக செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவான் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபத்தை பெற்று தருவார்.

திருமணம் கைகூடும்
நட்பு வீட்டில் கிரகங்கள் பயணம் செய்கின்றன. சனி, புதன், சுக்கிரன், சூரியன் சாதகமாக உள்ளதால்பண வருமானம் நன்றாக இருக்கும். புதன், குரு பயணம் நிறைய பண வருமானத்தை கொடுக்கும். இந்த மாதத்தில் மாத முற்பகுதியில் சுக்கிரன் நீச்ச பங்க யோகத்தை தந்து கொண்டிருக்கிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். திருமணம் செய்ய வாய்ப்பு கூடி வந்துள்ளது. மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பிள்ளைகளால் சந்தோஷம்
குரு பார்வையில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கப்போகிறது. இந்த மாதத்தில் அதிகம் பயணம் செய்வீர்கள். மாத பிற்பகுதியில் சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

காதல் இனிக்கும்
திருமண வரன் தொடர்பான பேச்சுவார்த்தை சுபமாக முடியும். காதல் விசயங்கள் மகிழ்ச்சியைத் தரும். காதல் கணித்து திருமணத்தில் முடியும். கணவன் மனைவி இடையேயான உறவுகள் உற்சாகத்தை அளிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும் காரிய வெற்றி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எளிதில் தீரும். சிலருக்கு வேலையில் இடமாற்றங்கள் உண்டாகும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும் மாதமாகும்.

கோபம் வேண்டாம்
அக்டோபர் 17ஆம் தேதிக்கு மேல் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். ஆறுக்குடைய சுக்கிரன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகத்தை தரும். புதன், சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு செல்லும் போது உடல் ஆராக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்களுக்கு அற்புதமான மாதம். கல்விக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தரும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மன மகிழ்ச்சி நிறைந்த மாதமாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications