பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : நேரலையில் தரிசிக்கலாம்
பிள்ளையார்பட்டியில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி: பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Pillaiyarpatti Temple Official என்ற யூட்யூப் சேனலில் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை நேரலையில் கண்டுகளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த 13ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய அம்சமாக கற்பகவிநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் கஜமுகாசூரனை வதம் செய்த நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியும் யுட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் பிள்ளையார்பட்டியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
கற்பக விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Pillaiyarpatti Temple Official என்ற யூட்யூப் சேனலில் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை நேரலையில் கண்டுகளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/VmOStmiPjjI
ஒன்பதாம் திருநாளன்று நடைபெற்ற ஆராதனை விழாவும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications