பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தாயாருக்கு பூச்சாற்று உற்சவம் கோலாகலம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் தொடங்கியது. வருகிற 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச்சி: பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த விழா வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்று முதல் வருகிற 6ஆம் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 7ஆம்தேதி முதல் 11ஆம்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். மேலும் வருகிற 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஸ்ரீரங்நாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும்.

வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரங்கநாச்சியார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

ரங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications