சிவ ஆலயங்களில் சோமவாரப்பிரதோஷம் கோலாகலம் - சிவன் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் சிவ ஆலயங்களில் பிரதோஷ விழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.
சிவ பெருமானுக்கு உகந்த விரதம் பிரதோஷ விரதம். சோமவார தினமான நேற்று சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாவிட்டாலும் வழக்கமாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுசாமி தரிசனம் செய்து வந்தனர்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் உள்ள பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் நேற்று வழக்கம்போல பிரதோஷ விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவ ஆலயங்களிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications