புத்தாண்டு பலன் 2025: இயற்கை சீற்றம், விலைவாசி உயர்வு.. உலகில் நிகழப்போகும் முக்கிய பிரச்னைகள்?
புத்தாண்டுபலன் 2025: 2025 ஆம் ஆண்டை பல புதிய நம்பிக்கைகளுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்தாண்டு மூன்று பெரிய கிரகங்களில் மாற்றம் இருக்கிறது. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தை விட்டு மீனத்துக்கு போகிறார். மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷபத்தை விட்டு மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. இது மிகவும் அரிதான காலகட்டம். இதனால் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.
குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்வது மிகவும் நல்லது. ஐடி, ஊடகம், நிதி, தகவல் தொடர்பு, தபால் சார்ந்த துறைகள் சிறப்பாக இருக்கும். தமிழ் வருட பிறப்பு நன்றாகவே இருக்கும். குருவால் குழந்தைகளின் கல்வியும் அற்புதமாக இருக்கும். ராகுவால் அறிவியல் பூர்வமாக புதிய தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் இருக்கும்.

2025 மார்ச் - மே மாதம் 51 நாட்கள் சூரியன், புதன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இலங்கை, இஸ்ரேல், போர்ச்சுகல் நாடுகளில் போர் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இலங்கையால் இந்தியாவுக்கும் சில பிரச்னைகள் வரலாம். கோயில்களில் பிரச்னைகள் நிகழும். கனிமவள பிரச்னைகளும் பரவலாக பேசப்படும்.
விவசாயிகளுக்கு இந்தாண்டு நன்றாக இருக்கும். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி நிச்சயம் நிகழும். இயற்கை விவசாயம் பரவலாகும். மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். உலகம் முழுவதும் இயந்திரமயமாக்கல் பரவலாகும். ஊடகத்துறையின் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும். எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.
கண் நோய், சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்படும். அதிக விபத்துகள் நடைபெறும். அரசியல் கட்சி தலைவர்களுக்கு கண்டம் உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள தலைவர்கள், மத குருமார்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தாண்டில் சனி மற்றும் செவ்வாய் பார்வை முக்கியமானதாக கருதப்படுகிறது.
மக்களுக்கு வரவு செலவு சரியாக இருக்கும். தங்கத்தின் விலை அதிகரிக்கும். முதலீட்டில் மிகப்பெரிய பிரச்னை அதிகரிக்கும். பெரிய வங்கிகள் எல்லாம் திவாலாகும். கடன்கள் அதிகரிக்கும். கிரெடிட் கார்டுகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். முதல் ஆறு மாதங்கள் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
ராகு சனி பகவான் வீட்டில் பயணிப்பதால் பலர் வேலையில் இருந்து கொண்டே தொழிலில் இறங்குவது அதிகமாகும். வேலை வாய்ப்பு பிரச்னையாகும். அதேநேரத்தில் வீட்டில் இருந்து கொண்டே தொழில் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கான மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழும். ஆட்சி கவிழ்ப்புகள் நடக்கும். பல பகுதிகளில் அரசியல் அசாதாரண சூழல் நிலவ வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் வேலையில் இருப்போருக்கு இந்தாண்டு நிறைய பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழிலில் திட்டமிடல் அவசியம். உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்கள் அதிகளவு நடைபெறும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீரால் அதிக பாதிப்புகள் நிகழும்.
உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வுகள் மக்களுக்கு பாதிப்புடைய வைக்கும். சவால்களும், பிரச்னைகளும் 2025 ஆம் ஆண்டில் சற்று அதிகமாகவே இருக்கும். பிப்ரவரியில் குரு வக்கிரம் மாறும்போது பிரச்னைகள் படிப்படியாக அதிகரிக்கும். மக்கள் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications