ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: யாருடைய வீட்டில் பொன்மழை பொழியும்..வெளிநாடு யோகம் யாருக்கு வரும்?
சென்னை: ராகு பகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் ஞானத்தை கொடுப்பார். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். கன்னி ராசி அதிபதி புதன், கேது பகவான் புதன் பகவான் போல செயல்படுவார். மீனம் குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு குரு பகவான் போல ஆன்மிகத்தையும் அளிப்பார்.
ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். இதுநாள் வரை 12ஆம் வீட்டில் விரையத்தில் அமர்திருந்த ராகு லாப ஸ்தானமான 11வது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் பிரச்சனைகளில் சிக்கித்தவித்தீர்கள் இனி தானாகவே மறைந்து விடும்.
இந்த நாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி மளமளவென முடியும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கைகூடி வரும். சிலருக்கு பிள்ளைபாக்கியம் வந்து சேரும். குல தெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும்.
எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த தம்பதியர் இடையே இனி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியான செய்திகளை சொல்வார்கள். குடும்பத்தில் நிலவும் அமைதியும் சந்தோசமும் உங்களின் பயணத்தை வெற்றிப்பாதையை நோக்கி இழுத்துச்செல்லும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். உடல்நிலையும் உற்சாகமாக இருக்கும்.

அலுவலகத்தில் இதுநாள்வரை உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலைக்கு ஏற்ற மதிப்பு கூடும். உயரதிகாரிகள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். உயர்பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கூட வரும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும் காலம் வந்து விட்டது பொன்மழை பொழியும் நேரம் இது. மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று உயர்கல்விக்கு செல்வார்கள்.
மோட்ச காரகன் கேது இதுநாள்வரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். இனி பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். மகான்கள் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.
புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும்.
தாய்வழி உறவினர்களுடன் கோபத்துடன் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்,
தடைப்பட்ட திருமணங்கள் கடகடவென நடைபெறும் சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.
பிள்ளைகளின் கல்விக்காக அதிக செலவு செய்யும் நீங்கள் அவர்களின் நலனிலும் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன்கள் வாங்க நேரிடும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை தரப்போகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications