ரதசப்தமி 2019 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமி
திருப்பதியில் பிப்ரவரி 12ஆம் தேதி ரத சப்தமி நடைபெறுவதை முன்னிட்டு ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
திருப்பதி : திருப்பதியில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. 12ஆம் தேதி ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.
சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தைநோக்கிப் பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்தும் நாள் 'ரத சப்தமி' நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.
ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி காலையில் ஆறு குளங்களில் குளித்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

திருப்பதியில் ரத சப்தமி
சூரிய நாராயணப் பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளில் சூரியனை வணங்குவதற்கு முன் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பது ஐதீகம்.
திருப்பதியில் ரத சப்தமியையொட்டி ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

புரட்டாசி பிரம்மோற்சவம்
திருமலை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய, சந்திர வாகனங்களில் சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். அதே போல் ரதசப்தமியன்றும் வெங்கடேசபெருமாள் 7 வாகனங்களில் திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். 7 நாள் வைபவத்தை ஒரே நாளில் பக்தர்கள் தரிசித்து மகிழலாம்.

7 வாகனங்களில் மலையப்பசுவாமி
12ஆம் தேதி ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஏழுமலையான் பவனி
அதன்படி அன்றைய தினம் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகனங்களில் ஏழுமலையான் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications