கணவன் மனைவி ஓயாத சண்டை.. நெருக்கத்தை அதிகரிக்கும் குங்குமப்பூ.. குரு தோஷம் நீக்கும்.. பணமழை பொழியும்
சென்னை: குங்குமப்பூ உலகிலேயே விலையுயர்ந்த நறுமணப்பொருள். காஷ்மீர் குங்குமப்பூ ஒரு கிலோ 3லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வாகிறது. மன சோர்வை தடுக்கிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சினையை தீர்க்கிறது. ஜோதிடரீதியான பரிகாரத்திலும் குங்குமப்பூ பயன்படுகிறது.
காஷ்மீர் குங்குமப்பூக்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட பிறகு அதன் மகத்துவம் அதிகரித்துள்ளது. விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது குங்குமப்பூவின் விலை. குங்குமப்பூவின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள் மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ இனிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படும். கர்ப்பிணி பெண்கள் தங்களின் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பாலில் குங்குமப்பூவை கலந்து குடிக்கின்றனர்.

காஷ்மீரில் பயிரப்படும் குங்குமப்பூக்களில் மகரந்த தாள் சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் மெல்லிய நார் போன்று காணப்படும். குங்குமப்பூ பூத்த 3 முதல் 4 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அவை 15 முதல் 20 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்கப்படுகிறது. அப்போது அந்தப் பூவில் உள்ள குங்குமப்பூக்கள் தனியாகப் பிரிந்து விடும். சுமார் 40 முதல் 50 பூக்களிலிருந்து 1 கிராம் அளவே குங்குமப்பூ கிடைக்கிறது.
ஜோதிடத்தில் பரிகாரத்திற்காக குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க தாந்திரீக பரிகாரமாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்களுக்கு குங்குமப்பூ கொண்டு செய்யப்படும் பரிகாரம் மூலம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சுக்கிரதோஷம் இருந்தால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை சச்சரவு இருக்கும். சுக்கிரனால் தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்னைகள் தீர குங்குமப்பூ, தேன், உள்ளிட்ட பொருட்களை ஏழை பெண்ணுக்கு தானமாக அளிக்கலாம். சுக்கிர கிரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தை சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தம்பதியினர் திங்கட்கிழமையன்று சிவபெருமானை குங்குமப்பூ சேர்த்த பால் அபிஷேகம் செய்யலாம். பின்னர் குங்குமப்பூவினால் பொட்டு வைத்துக் கொள்ளவும். 11 திங்கட்கிழமை இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சந்தனம், செந்தூரம் உடன் குங்குமப்பூவை கலந்து அரைத்து பொட்டு வைத்து கொள்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தீய விளைவுகள் நீங்கும்.
வீட்டில் பண பிரச்சினை, வேலை இழப்பு ஏற்பட்டவர்கள் மகாலட்சுமியின் அருள் பெற ஒரு வெள்ளைத் துணியில் குங்குமப்பூவை வைத்து உங்கள் பண அலமாரியில் வைக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். பொன் நகை ஆபரணங்கள் சேரும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். குளித்து விட்டுதான் குங்குமப்பூவை தொட வேண்டும். ஒருபோதும் நீங்கள் குளிக்காமல் குங்குமப்பூக்களை தொடக்கூடாது.
தொழில் வியாபார ஸ்தலங்களில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் குங்குமப்பூவை அரைத்து பணம் வைக்கும் பெட்டி அருகே ஸ்வஸ்திக் சின்னம் வரையலாம். முக்கியமான ஆவணங்களில் குங்குமப்பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இதன் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications