சனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். மேஷ லக்னகாரர்களுக்கு சனிபகவான் 10 மற்றும் 11ஆம் வீட்டு அதிபதி. தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம். கர்ம ஸ்தான அதிபதி கர்ம ஸ்தானத்தில் அமரப்போகிறார். பத்தாம் வீட்டில் அமரப்போகும் சனிபகவானின் பார்வை 12ஆம் வீடு 4ஆம் வீடு ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. அப்போ இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் இடமான பத்தாம் பாவகம் 12ஆம் பாவகம், சுக ஸ்தானமான நான்காம் பாவகம் ஏழாம் பாகவம் என நான்கு வீடுகளைப் பற்றியும் நாம கவனிக்கணும். தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் சனியால் என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.
ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. மேஷ லக்னகாரர்கள் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள். முன்கோபமும், பிடிவாதமும் அதிகமாக இருக்கும். அறிவாளி என்று பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு சனிபகவான் தனது வீடான மகர லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இது மேஷ லக்னத்திற்கு பத்தாம் பாவகம்.
பத்தாம் பாவகம் நம்முடைய ஒவ்வொரு செயலும் எப்படி நடக்கும் என்ன நடக்கும் என்று சுட்டிக்காட்டும் இடம் . பதினோராம் பாவம் சந்தோஷம், லாபம் பற்றி உணர்த்தும் இடம். எனவே சனிபகவான் தான் இருக்கும் வீடுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். எப்பவுமே தங்களின் ஆசை அபிலாஷைகளைப் பற்றி மேஷ லக்னகாரர்கள் வெளியில் சொல்லக்கூடாது பெருமை பேசக்கூடாது. கண்டுபட்டுவிடும். மேஷ லக்னகாரர்களுக்கு கர்ம ஸ்தானம் அதிபதி சனிபகவான்.
புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு புது வேலை கிடைக்கும்

சனிபகவான் நீதிமான்
சனிபகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ, எந்த பாவகத்தை பார்க்கிறாரோ அதற்கேற்ப பலன்களைத் தருவார். சனிபகவான் நீதிமான். நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு ஏற்ப பலன்களைத் தருவார். பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் என்பதால் நாம் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். முதலாளிகளை ஏமாற்றினாலே வேலை செய்யும் இடத்தில் தப்பு செய்தாலோ அதை கண்டிப்பாக காட்டிக்கொடுத்து விடுவார் சனிபகவான். தப்பு பண்றவங்க தண்டனை அனுபவித்துதானே ஆகணும். அதனால் நேர்மையாக நடத்துக்கிட்டா எந்த தண்டனையும் கிடைக்காது.

உடம்பை கவனிங்க
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலையை கொடுப்பார். அரசு வேலைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் விசயத்தில் எச்சரிக்கை தேவை. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். உடம்ப கவனிக்கலைன்னா அப்போ நோயில படுக்கணும். அதனால் சின்ன பிரச்சினை வந்தாலும் உடனே டாக்டர்கிட்ட போங்க.

நிம்மதியான தூக்கம்
தொழில் ஸ்தானத்தில இருக்கிற சனிபகவான் லாபத்தை தருவதோடு வருமானத்தையும் அதிகரிப்பார். அதே போல சனிபார்வை விழும் 12 ஆம் வீடு அயன சயன ஸ்தானம் ஆக்டிவேட் ஆகும். வெளிநாடு போகும் யோகம் கிடைக்கும். நமக்கு கிடைக்கும் நிம்மதியான தூக்கம் பற்றியும் இந்த இடம் சொல்லும். படுக்கை சுகம் பற்றியும் இந்த இடம் உணர்த்தும் இடம். இந்த சனிப்பெயர்ச்சியால் நீங்க வெளிநாடு முயற்சி செய்யலாம். பாஸ்போர்ட் விசா கிடைக்கும். தூக்க குறைபாட்டினால் உடலில் சோர்வும் அசதியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பெருமை பேசாதீங்க
அதே போல நான்காம் பாவகம் சுக ஸ்தானம். வீடு, வண்டி வாகனம் சொத்து சேர்க்கை பற்றி சொல்லும் இடம். அம்மா ஸ்தானம், தாயின் உடல் நலம் பற்றியும் உணர்த்தும் இடம். இந்த இடத்தை சனிபகவான் பார்வையிடுவதால் நாம் எப்போதுமே நம்முடைய வீடு பற்றியும் நம்முடைய அம்மாவின் உடல் நலத்தின் மீதும் அக்கறை கொள்ளவேண்டும். எனவே நம்முடைய வீடு பற்றி நாம் பெருமையாக சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவ்வளவுதான் பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும். வீடே நிம்மதி இழக்கும். எனவே நமக்கும் கிடைக்கும் சந்தோஷத்தை நாம் பெருமையாக வெளிப்படுத்தக்கூடாது.
அம்மாவோட உடல் நலத்தில அக்கறை செலுத்துங்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சிலருக்கு வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு சுபகாரியங்கள் நடக்கும்.

காதல் திருமணம்
சனிபகவான் தனது பத்தாம் பார்வையால் உங்க லக்னத்திற்கு ஏழாம் பாவகத்தை பார்க்கிறார் அது உங்கள் களத்திர ஸ்தானம். நீங்க காதலிக்கலாம் அதைப்பற்றி யாரிடமும் பெருமை பேசாதீங்க. அப்படி பெருமையாக சொன்னால் அதை கெடுத்து விட சிலர் பார்ப்பார்கள். திருமணம் கைகூடும் வரை எதைப்பற்றியும் மூச்சு விடாதீர்கள். கணவன் மனைவி உறவு சந்தோஷமாகவே இருக்கும். நாங்க ஆதர்ஷ தம்பதிகள் என்று எதையும் வெளிப்படையாக சொல்லாதீர்கள். எல்லோர் மனசும் நல்லமனசாக இருக்காது எதையாவது பிட்டைபோட்டு பிரிச்சு விட்டுருவாங்க. சுப செலவுகள் அதிகரிக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சந்தோஷங்கள் அதிகமாகவே கிடைக்கும். நாம் நல்லது செய்வோம் நல்லதே நடக்கும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!