சனி பெயர்ச்சி .. சுத்தம் இல்லாதவர்களை சனிக்கு பிடிக்குமாம்.. மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
சென்னை: ஆவணத்தோடும் அகங்காரத்தோடும் நடந்து கொள்பவர்களை சனிபகவான் சரியான நேரத்தில் தண்டிப்பாராம். சுத்தம் இல்லாத குப்பைகள் நிறைந்த இடம் சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நிரந்தரமாக தங்கி விடுவாராம்.
சனி பகவான்: நவ கிரகங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் தங்கியிருந்து நல்லதும் கெட்டதுமாக பலன்களை கொடுப்பார் சனிபகவான். சனி பெயர்ச்சியை எல்லோரும் ஒருவித அச்சத்தோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். சனியின் பார்வை படும் இடம் பாழ் என்று சொல்வார்கள். சனிபகவான் நீதிமான் என்பதால் நல்ல மனம் படைத்தவர்கள், உதவி செய்யும் குணம் கொண்டவர்களை சனிபகவான் தண்டிக்க மாட்டார்.

அசுத்தமான இடம்: உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான்க்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி பகவான் மிகவும் பிடிக்கும். குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும். அவர்களை பிடித்துக்கொள்வார்.
சனி பகவான் தரும் தண்டனை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும். மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார். பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனி பகவானுக்கு பிடிக்கும்.
அஷ்டமத்து சனி: கடகம் ராசிக்காரர்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். சனி பகவான் வக்ரமாக பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும்.
கண்டச்சனி: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்ம் சனிபகவான் கண்டச்சனியாக கவலைக்கு ஆளாக்கி வருகிறார். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம்.
அர்த்தாஷ்டம சனி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான், தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருக்கிறார். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
பாத சனி கவனம்: மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் பாத சனி காலமாகும். தற்போது சனி பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். வக்ர மடைந்து பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின்னர் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற சந்தர்ப்பம் அமையும். வக்ர சனி காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

ஜென்ம சனி: கும்ப ராசிக்காரார்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாகும். உங்கள் ராசியிலேயே சனி பகவான் வக்ரமடைந்து பின்னோக்கி செல்வதால் ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு அமையும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கொடுக்கும். மாணவர்களுக்கு உயர் கல்விக்காக வெளிநாடுகளில் இருந்து செய்திகள் சாதகமான தகவல் வரும். இந்த ஏழரை சனி காலத்தில் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
விரைய சனி: மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி காலமாகும். சனி பகவான் வக்ரமடைந்து பின்னோக்கி செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
சனி பகவானின் கருணை: காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி பகவான் நேசிப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை. காகத்திற்கு எள் கலந்த வைத்து வழிபடுபவர்களை சனி பகவான் நெருங்குவதே இல்லை. உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார். நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு செய்பவர்களை சனி பிடிப்பதில்லை. வலம்புரி சங்குள்ள வீடு சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் எதுவும் செய்ய மாட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications