சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23: அஷ்டம சனி என்றாலும் விபரீத ராஜயோகம்தான்
சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என்று ஜோதிடம் சொல்கிறது. சன
மதுரை: சனி பெயர்ச்சி பற்றி பலரும் விசாரித்துக்கொண்டிருக்கின்றனர். ஏழரை சனி பற்றி எத்தனை பேர் பயப்படுகிறார்களோ அதே போல அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி பற்றியும் பலருக்கும் பயம் இருக்கிறது. கண்டச்சனி இரண்டரை வருடம் படுத்தி எடுத்தாலும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அஷ்டமத்து சனியாக பாதிப்பை ஏற்படுத்தும். சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுனம் ராசிக்கு சனிபகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் அமர்கிறார். சனி மிதுனம் ராசிக்கு எட்டாம் வீட்டு அதிபதி. எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோக காலம் என்பதால் அஷ்டம சனி வந்து விட்டதே என்று பயப்பட வேண்டியதில்லை.
நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனி சஞ்சரிக்கும் இடத்தைப் பொருத்து பலன்களும் பாதிப்பும் ஏற்படும் என்றுதான் சனிபகவான் மகரம் ராசிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் பாதிப்பு எதுவும் இருக்காது காரணம் சனிபகவான் தனது ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டுகாலம் சனியில் பிடியில் சிக்கியிருந்தார்கள். அவர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதேபோல ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி முடிகிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது என்றாலும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, செய்யும் தொழிலில் உயர்வும் கிடைக்கும்.
சனி பகவான் மகரத்தில் உத்திராடம் 2,4, திருவோணம், அவிட்டம் 1,2 ஆகிய நட்சத்திரங்களில் சனி சஞ்சரிக்கிறார். சனிபகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் 2020 ஜனவரி 24 தொடங்கி, 2021 ஜனவரி 15ஆம் தேதி வரை உத்திராடத்தில் சஞ்சரிக்கிறார். திருவோணம் நட்சத்திரத்தில் 2022 பிப்ரவரி 17ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அவிட்டம் நட்சத்திரத்தில் 2022 மே மாதம் வரைக்கும் சஞ்சரிக்கும் அவர் கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்தில் அதிசாரமாக நகர்கிறார்.

ராஜயோகம் தரும் சனி
சனி மிதுனம் ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதுக்கு உடையவர். சனி உங்க ராசிக்கு யோகக்காரர். அதிர்ஷ்டகரமான காலம். காரணம் எட்டுக்கு உடையவர் எட்டில் அமர்வது ராஜயோகம். மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். அஷ்டம சனி காலத்தில் உடல் ரீதியாக பாதிப்பு வரலாம் எச்சரிக்கை தேவை.

பணம் பத்திரம்
சனி பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. இரண்டாம் வீடு, மற்றும் ஐந்தாம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுகிறது. இந்த கால கட்டத்தில் பிசினஸ் செய்பவர்கள் பண முதலீடுகளில் எச்சரிக்கையாக இருங்க. பணத்தை பத்திரமாக வச்சிக்கங்க. குடும்பத்தில இருக்கிறவங்க கிட்ட பேசும் போது ஜாக்கிரதையாக பேசணும், இல்லாட்டி தவறா புரிஞ்சுக்குவாங்க. கணவன் மனைவிக்கு இடையே கூட சண்டைகள் வரலாம் கவனமாக பேசணும்.
வேலை செய்யும் இடத்தில உங்க திறமைகள், புகழ், பெருமைகளை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவாங்க அதனால உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.

முதலீடு வேண்டாம்
ஏழாம் வீட்டில் இருந்த சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாகவே கணவன் மனைவி பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இனி அந்த பிரச்சினைகள் படிப்படையாக முடிவுக்கு வரும். பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். யாராவது பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம்.

தைரியம் அதிகமாகும்
உத்திராடம் சூரியன் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும். திருவோணத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் மனதில் எண்ணங்கள் அலைபாயும். பேச்சினால் பிரச்சினை வரலாம் ஜாக்கிரதை. சனி அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சி பண்ணலாம். உங்க தசாபுத்தி எப்படி இருக்குன்னு பாருங்க.
திங்கட்கிழமை, சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானை வணங்கிட்டு வாங்க சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். அறுபடை வீடுகளுக்கு யாத்திரை போயிட்டு வாங்க நல்லது நடக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications