கும்ப ராசியில் சூரியனுடன் இணைந்து பயணிக்கும் சனிபகவான்..இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்
கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்யும் சனிபகவான் ஒரு மாத காலம் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். யாருக்கெல்லாம் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: சனிபகவான் நீதிமான் நிறைய படிப்பினைகளைத் தருவார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் சூரியனுடன் இணைந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து நிம்மதி பிறக்கிறது. மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் இந்த காலத்தில் சூரியனும் இணைந்துள்ளார். இந்த சனியின் சஞ்சாரம் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். கும்பம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களான மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் மேஷ ராசியில் உள்ள ராகுவின் மீதும் பார்வையை பதிக்கிறார். இந்த சனி பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி பகவான் பயணம் செய்வதால் நிறைய லாபங்கள் கிடைக்கும். மேஷ ராசியில் உள்ள ராகுவின் மீது சனிபகவானின் பார்வை விழுகிறது. லாப சனி நிறைய லாபத்தை தரப்போகிறார். சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் செய்வதற்கான நேரம் கைகூடி வந்து விட்டது. வேலை செய்பவர்களுக்கு புரமோசனும், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி மூலம் திடீர் ஜாக்பாட் கிடைக்கும்.

ரிஷபம்
சனி பகவான் ரிஷபம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெரிய வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். உங்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி புதிய விடியல் ஆரம்பமாகிறது.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே..உங்களை ஆட்டி வைத்த அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தையும் லாபத்தையும் தரப்போகிறார். பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். வெளி நாடு பயணம் செல்லும் யோகம் வரும். சகோதரர்களிடம் பேசும் போது அதிக கவனம் தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பயணம் செய்யும் காலம் பொன்னான காலம். பதவியில் முழு அதிகாரத்தையும் சனி தருவார். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். இனி யோகமான கால கட்டமாக அமைந்துள்ளது. சனி தனது சொந்த வீட்டில் பயணம் செய்வதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். எதிரிகள் தொல்லை ஒழியும். வெற்றிகள் தேடி வரும். விபரீத ராஜயோகம் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம் வியாபாரம் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலட்டமாகும்.

துலாம்
அர்த்தாஷ்டம சனி காலம் முடிந்து பூர்வ புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வரம் போல கிடைக்கப்போகிறது. நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோட கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கையும் கவனமும் தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை உண்டாகும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு வந்து போகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டு காலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். ஏழரை சனி முடிந்து விட்டதால் இனி விடிவுகாலம்தான். பொருளாதார சிக்கல்கள் நீங்கும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தடைகளைத் தாண்டி திருமண யோகம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். சனி பகவானின் பார்வை, 5, 7,12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.

-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications