Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2025: சிகரம் ஏறப்போகும் மகர ராசிக்காரர்கள்.. 22 வருஷம் இனி அசைக்கவே முடியாது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025 : ஏழரை சனியில் இருந்து விடுதலை அடையும் மகர ராசிக்காரர்கள் வரும் புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகளைப் பெறப் போகிறீர்கள், எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், எந்த மாதிரியான பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். (Elarai sani ends for magaram)

தற்போது கும்பத்தில் இருக்ககூடிய சனி பகவான் 2025 புத்தாண்டில் மீன ராசியை நோக்கி பயணிக்கவுள்ளார். கணக்கை முடிக்கும் கடவுள் சனி பகவான். கால புருஷ சக்கரம் மேஷத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடியும். மீனத்தில் சனி பிரவேசிக்கும்போது அதனுடைய மொத்த சுற்று நிறைவடைகிறது. பாரபட்சமே இல்லாமல் தண்டனை மற்றும் நல்ல பலன்களை வழங்கும் நீதிபதிதான் சனி பகவான்.

sanipeyarchi astrology

நீங்கள் செய்யும் நல்லது, கெட்டது என அனைத்து கர்மங்களுக்கும் ஏற்ற அனைத்துப் பலன்களையும் அள்ளித் தருவார் சனி பகவான். சனி பகவான் துலாம் ராசியில் உச்சமடைகிறார். அதாவது, பிளஸ்ஸாக இருந்தாலும், மைனஸாக இருந்தாலும் மொத்தமாக கணக்கைத் தீர்ப்பவர் சனி பகவான். அந்த வகையில், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். (Magaram Rasi palan 2025)

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி எந்நெந்த பிரச்னைகளைக் கொடுக்க முடியுமோ அத்தனை கஷ்டங்களையும் கொடுத்திருக்கும். குறிப்பாக, உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் சந்திக்காத அனைத்து பிரச்னைகளையும் இந்த காலங்களில் சந்தித்திருப்பீர்கள். லீகல், இல்லீகல் என அனைத்து பிரச்னைகளாலும் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள்.

கடன், நோய், வழக்குகள் என மொழி தெரியாத ஊரில் கூட பிரச்னையால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்திருக்கும். எதிரி தொல்லை, சத்ரு தொல்லை, வம்பு வழக்கு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். குருப்பெயர்ச்சியால் கொஞ்சம் தப்பித்திருந்த இந்த ராசிக்காரர்களுக்கு, வரும் ஆண்டு மகத்தான ஆண்டாக அமையும். பூரணமாக ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

22 1/2 ஆண்டுகளுக்கு இனி இவர்கள் வாழ்வில் யோகம் தான். தொட்ட காரியங்கள் அனைத்திலும் இனி வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். எங்கே அவமானப்பட்டார்களோ, எங்கே தொலைந்தார்களோ அங்கே சாதித்துக் காட்டக்கூடிய காலம் உண்டாகும். விட்டதை பிடிக்க கூடிய காலகட்டம். பொது தளத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள்.

சபையில் இவர்களுடைய குரல் இனி எடுபடும். குழந்தை, பூர்வீக சொத்து, இடம் தொடர்பான விஷயங்களில் கடும் பாதிப்பை சந்தித்து வந்த மகர ராசிக்காரர்களுக்கு இனி நல்ல பலன்கள் கிடைக்கும். மகர ராசிக்காரர்களுக்கு இனி வெற்றிப் பாதைதான். சனி ஆட்சி பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள். ஏழரை சனி நடந்து வந்தாலும் பல்வேறு நன்மைகளையும் சனி பகவான் கட்டாயம் கொடுத்திருப்பார். ஏழரையால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நல்ல பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார். இனி உங்களுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

நினைத்த காரியங்கள் உங்களுக்கு கைகூடும். உங்களுடைய இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறுவீர்கள். புதிய வீட்டுக்கு மாறும் யோகம் உண்டு. நீண்டநாள் உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வங்கிக் கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனக் குறைகள், பாரங்கள் குறையும். குடும்பத்தில் குழப்பங்கள், பயங்கள் நேரும். மகத்தான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: குழந்தை தொடர்பான விஷயங்களில் ஏறுமுகம் உண்டாகும். மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி, மூன்றாம் பார்வையாக வீட்டை பார்க்கிறார். இது புத்திர ஸ்தானம். அதனால், குழந்தைகள் விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும். முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக ஈடுபட வேண்டும். குரு பகவான் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.

கல்வி: மகர ராசிக்காரர்கள் வைராக்கியமாகவும், தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் பிடிவாதத்துடனும் செயல்பட்டு வருவீர்கள். எந்தவொரு செயலை எடுத்தாலும் அதன் எல்லை வரை செல்வீர்கள். எனவே, அதனை ஆக்கப்பூரவமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதில் பயன்படுத்தினால் வெற்றி உங்களுக்கு நிச்சயமாக கைகூடும்.

பெண்களுக்கு எப்படி இருக்கும்?: சனிப்பெயர்ச்சி அனுகூலமாக உங்களுக்கு இருக்கும். புத்திரகாரகன் குரு 6 ஆம் இடத்தில் இருப்பதால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதம் கவனம் செலுத்த வேண்டும். ஏழாம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் ராசியை பார்ப்பதால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். தேவையான இயற்கை வைத்தியங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் டென்ஷனாக இருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.

பரிகாரங்கள்: மகர ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சிக்கு பிரதேயேகமான பரிகாரங்கள் தேவை இல்லை. இரண்டாம் இடத்தில் இருக்ககூடிய ராகு, ஆறாம் இடத்தில் இருக்ககூடிய குரு கிரகத்துக்கும் பரிகாரங்கள் செய்யலாம். பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். 100க்கு 200 மதிப்பெண்கள் வாழ்வில் பெற்று வாழ்வில் வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+