இந்த ஒரு ராசி ரொம்ப கவனமாக இருக்கணும் பாஸ்.. சனி வக்ர பெயர்ச்சி கொஞ்சம் ரிஸ்க்தான்.. பார்த்து!
சென்னை: ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி ஒரு ராசிக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது.
கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார். அதுதான் அந்த ராசியின் கடைசி நட்சத்திரம். இப்படிப்பட்ட நிலையில் அவர் பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.

சனி பகவான் அடிக்கடி இடம் மாற கூடியவர் அல்ல. ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் அதாவது இரண்டரை ஆண்டு காலம் இருக்கும் குணம் கொண்டவர் சனி பகவான்,. ஒரு ராசியில் இருக்கிறார் என்றால் அந்த ராசிக்கு மட்டுமல்ல 12 ராசிகளுக்கும் நல்ல பலன்களையும் கெடு பலன்களையும் கொடுக்க கூடியவர்.
அதோடு அவ்வப்போது முன்னும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள்.
தனுசு ராசிக்கான பலன்: ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி தனுசு ராசிக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது. அவை என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும்
இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும். அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம்.
வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
கிட்னி பிரச்சனை ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம்.
வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம்.
அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் . உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். இந்த சனி வக்கர பெயர்ச்சி உங்களுக்கு கொஞ்சம் ரிஸ்க்தான்.
பலன்கள் என்ன?: சனி வரும் இடத்தை உங்களுக்கு தொழில் ஸ்தானம் என்பார்கள். இங்கே பார்வையிடுவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது. உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டு,
உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications