சனிப்பெயர்ச்சி 2020: சனிபகவானுக்கு பரிகார பூஜை - மார்கழி பவுர்ணமியில் முப்பெரும் யாகங்கள்
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவான் பரிகார தலங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபட்டனர்.வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மகாயாகம், வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பாதாள சொர்ண சனீஸ்வரர், ஜெய மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்கிழமை 29.12.2020 திருவாதிரை நட்சத்திரத்தில் பவுர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற உள்ளன.
நவகிரகங்களில் மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் அதிகாலை 05:22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து, உத்தராட நட்சத்திரம் 2ம் பாதம் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் காலை கோ பூஜையுடன் 10 மணிக்கு சனி பெயர்ச்சி மகாயாகம்
நடைபெற்றது இந்த யாகத்துடன் ஆஞ்சநேயர் யாகம் காலபைரவர் யாகம் தன்வந்திரி யாகம் மகா கணபதி யாகம் நடைபெற்று தன்வந்த்ரி பீடத்தில் உள்ள ஸ்வர்ண சனீஸ்வரர் மற்றும் ஜெய மங்கள சனீஸ்வரர் விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை அரசு வழி காட்டுதல்படி நடைபெற்றது .
இந்த யாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் மற்றும் குடும்பத்தினர்
வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி மதிவாணன். வாலாஜா காவல் ஆய்வாளர் பாலு சென்னை தொழில் அதிபர் குணசேகர். காட்பாடி ஜெய்சங்கர் சென்னை கனராவங்கி சீனியர் மேனஜர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தடை நீக்கும் ஹோமங்கள்
தன்வந்திரி பீடத்தில் நாளை செவ்வாய்கிழமை 29.12.2020 திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற உள்ளன. குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும்,ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெறும்.
ஆண் பெண் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமத்துடன் பங்குபெற்ற ஆண் பெண்களுக்கு கலசாபிஷேகமும் மாங்கல்ய பூஜையும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு. 94433 30203.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications