சனிப்பெயர்ச்சி 2025: ராஜயோகம் பெறும் மிதுன ராசிக்காரர்கள்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டு தான்
சனிப்பெயர்ச்சி 2025: 2025 மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். 2025 ஆம் ஆண்டை பலரும் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். மிதுனம் ராசிக்கு இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் காற்றோடு பறந்து யோகங்கள் வீட்டு கதவை தட்டும் காலம் இது. இந்த காலத்தில் எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது. வாங்க தெரிந்து கொள்ளலாம்... (Sani Peyarchi for midhunam)
மிதுனம் ராசிக்காரர்களுக்கு 12 ஆம் வீட்டில் குரு இருந்ததால் நிறைய பிரச்னைகள் வந்திருக்கும். தொழில் மற்றும் குடும்பங்களில் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். கடன் கழுத்தை நெரித்திருக்கும். குரு வக்கிர நிலைக்கு வருவதால் ஆறுதல் பிறக்க போகிறது. அஷ்டம சனியில் இருந்து விடுபடுவதால் இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய பரிசாக இருக்கும். (Puthandu palan for midhunam)

மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியாகவும் வருகிறார். பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் இந்த சனிப்பெயர்ச்சிக்கு ராஜயோகம் தரும். சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.
உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு தரும். எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை கிடைக்கும். வாழ்க்கை துணை மற்றும் தொழில் கூட்டாளிகளுக்கும் அனுகூலம் ஏற்படும். தந்தை வழி சொத்துகள் பிரச்னை சரியாகி சாதகமான தீர்வு கிடைக்கும். பிரம்மாண்ட வீடு, சொகுசு வாகனம் வாங்கி அடுத்த கட்டத்துக்கு பயணிக்கு செல்லும் சூழல் உருவாகும்.
இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும். சனி திசை நடப்போர் வேலை, தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள்.
உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும். 2025 ராசிக்குள் குரு பகவான் வந்துவிடுவார். ராசிக்கு இரண்டாம் இடம் உச்சம் பெற்று குரு பகவான், பத்தாம் இடத்தில் உள்ள சனி பகவானையும் பார்ப்பார். அதனால் அடுத்த இரண்டு ஆண்டுகள் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
கலை மற்றும் காவல்துறையில் நல்ல உயர்வு கிடைக்கும். புகழ் தேடி வரும். ஏமாற்றங்கள் எல்லாம் கலைந்து மன நிறைவு ஏற்படும். கணவன், மனைவிக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். விரய சனி என்பதால் சுப செலவுகள் வரும். திருமண யோகம் உண்டு.
அதேநேரத்தில் இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சற்று கவனமாகவும் இருக்க வேண்டும். ராசியில் உள்ள குரு ஜென்ம குருவாக வருவதால் பொருளாதாரத்தில் உங்களை சிலர் தவறாக வழிநடத்துவதற்கும் வாய்ப்புள்ளது. முதலீட்டில் புதியவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்கள்: மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்கள் துறை சார்ந்த விஷயங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இரவு நேத்தைத் தவிர்த்து காலை நேரம் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தளவாடங்கள் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்கள்: பெண்களை பொறுத்தவரை வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் வார்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தொழிலில் அதீத உழைப்பும், அதற்குண்டான பலனும் கைமேல் கிடைக்கும்.
பரிகாரம்: களத்தில் இறங்கி கடுமையாக வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். துப்புரவு தொழிலாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் உதவி செய்யலாம். பெருமாள், விஷ்ணு வழிபாடு வாழ்வில் ஏற்றம் கொடுக்கலாம். திருநள்ளாறு கோயில் சென்று வழிபடலாம்.












Click it and Unblock the Notifications