செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. உச்சம் பெற்ற புதனால் வருமானத்தை அள்ளப்போகும் ராசிக்காரர் யார்?
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அற்புதங்கள் நிகழப்போகிறது. சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஆரோக்கியம் அற்புதம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் ராசி நாதன் புதன் நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார். குரு பார்வையில் ராசி நாதன் புதன் அமர்ந்திருப்பது சிறப்பு. வக்ரமடைந்த குரு மீது சனியின் பார்வை கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். செவ்வாய் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் சூரியன் தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

முயற்சிகளுக்கு வெற்றி
அஷ்டமத்து சனி சின்னச் சின்ன பாதிப்புகளை ஏற்படுத்துவார். 4ஆம் வீட்டில் புதன் வக்ரமடைவார், அஷ்டமத்தில் சனி வக்ரமடைந்திருக்கிறார். பத்தாம் வீட்டில் குரு வக்ரமடைந்து பயணம் செய்கிறார். வேலைக்காக புதிய முயற்சிகளை செய்யலாம். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த காரியத்தையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள்.

கோபம் வேண்டாம்
குடும்ப உறுப்பினர்களிடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். எனவே விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. திருமண சுப காரியம் தொடர்பாக வரன் பார்க்கத் தொடங்கலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேகமாக பேசி பிரச்சினைகளை இழுத்து போட்டுக்கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு சிரமம் இருந்தாலும் படிப்பில் கவனத்தை அதிகரிப்பீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் கவனமாக இருங்கள். நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம். கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் போது கவனமும் நிதானமும் தேவை.

திடீர் வருமானம் அதிகரிக்கும்
தொழில் ரீதியாக செய்யும் முதலீடுகள் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். எங்கிருந்தோ திடீர் பணம் தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். 5ஆம் வீட்டில் உள்ள கேதுவின் மீது ராகுவின் பார்வை படுவதால் மாணவர்களுக்கு சில கவனக்குறைவு தொடர்பான பிரச்சினைகளை கொடுக்கலாம் எனவே விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications