செப்டம்பர் மாத ராசிபலன் 2019: ஜென்மசனி, விரையகுருவால் தனுசு ராசிக்கு பலன் எப்படி
செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி, விரைய குருவினால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும். தடுமாறிய தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிச்ச புள்ளி தென்படும் காலம் வந்து விட்டது.
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஒன்பதாம் வீட்டிலும் பத்தாம் வீட்டிலும் கூட்டணி அமைக்கும் கிரகங்களினாலும் ஜென்ம சனி, விரைய குருவினால் தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது தனுசு ராசிக்கு பாதிப்பு குறையும்
மாத முற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் தொழில் ஸ்தானமான கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் என்னென்ன நடக்கும் பண வருமானம், கல்வி, வேலை வாய்ப்பு திருமண முயற்சி எப்படி என்று பார்க்கலாம்.

சோதனைகள் சாதனைகள்
தனுசு ராசிக்ககாரர்களே செப்டம்பர் மாதத்தில் சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள். இந்த மாதம் ஒன்பதாம் வீடான சிம்மத்தில் நான்கு கோள்கள் இணைகின்றன. இது அற்புதமான மாதம் இந்த மாதத்தில் சூரியன் வலுவாக இருக்கிறார் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் நீங்கும். தடைகள் நீங்கும். செவ்வாய் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சூரியனுடன் இருப்பதால் நன்மைகள் நடைபெறும். புதனும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் பாதிப்புகள் இல்லை.

கவலைகள் தீரும்
செப்டம்பரில் 10, 11ஆம் தேதி கிரகங்கள் இடமாற்றம் அடைகின்றன. இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் மறையப்போகிறது. ராசியில் இருக்கும் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் தீரப்போகிறது. குடும்பத்தில் மன நிம்மதி இல்லாத நிலையில் இருந்தது. இனி கவலை வேண்டாம். வரவு வரும் போது செலவு வருகிறதே என்று கவலை வேண்டாம்.

தொழில் லாபம் வரும்
சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும் வீண் விரைய செலவுகள் இனி அதிகம் இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் நகைகளை வாங்குவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். மாத பிற்பகுதியில் பிசினஸ், வியாபாரத்தில் நன்மை ஏற்படும். தொழிலில் முதலீடு செய்த பணம் வரும். பிள்ளைகளால் சுப செலவுகள் இருந்தாலும் அதனால் கவலை வேண்டாம். சோதனைகள் விலகும்.

உற்சாகமான மனநிலை
மாணவர்களுக்கு குரு நன்மையாக இருக்கிறார். புதன் ஆட்சி உச்சம் பெறுவதால் மேற்படிப்பு உற்சாகமாக இருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும். ஜென்ம சனி திருமணத்தில் தடங்களை ஏற்படுத்துவார். சரியான புரிதல் இல்லாத ஜோடியுடன் சேருவதால் பிரிவினை ஏற்படும். ராசிநாதன் குரு விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் செவ்வாய் பார்வை இருப்பதால் நன்மைகள் நடைபெறும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். தட்டு தடுமாறிக்கொண்டிருந்த உங்கள் வாழ்க்கையில் வெளிச்ச புள்ளி கண்ணுக்கு தெரியும். இனி வரும் மாதங்களில் குருவின் நகர்வும் உங்களுக்கு நன்மையை தரும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications