Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிர திசைன்னா ஒரு டிசிப்பிளின் வேணா.. யூடியூப்ல சாமி பாட்டா? காட்றா அந்த கிளாமர் பாட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிர திசையில் காதல் மணியடிக்கும். இளசுகள் காணும் இடமெங்கும் கன்னிகளாக காட்சி அளிக்கும். அதையும் மீறி சுக்கிர திசையில் ஆன்மீக அலை வீசினால் ராகுவின் கூட்டணியோ, செவ்வாய் கூட்டணியோ இருந்தால் மனசை மாற்ற என்னென்னவோ செய்வார் சுக்கிரன். அதை மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.

சுக்கிரன்: அசுர குரு சுக்கிரன். நவ கிரகங்களில் சுக்கிரன் சுப கிரகம். காதல் நாயகன் களத்திர காரகன். காதலுக்கும் ஆசைக்கும் சொந்தக்காரன். இல்லற வாழ்க்கையில் சுகத்தையும் சந்தோஷத்தையும் தருபவர் சுக்கிரன். சுக்கிரன் பிறந்த ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் சுக்கிர திசை காலத்தில் யோகங்கள் வரும். கோடி கோடியாக அள்ளித்தருவார் சுக்கிரன். சும்மாவே இருக்க விடமாட்டார் எந்த அளவிற்கு பணத்தை அள்ளித்தருவாரோ அதே போல சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தருவார் சுக்கிரன்.

Shukra Dasha: Astrology Memes Shukra mahadasha and remedies

சுக்கிர திசை எப்போது வரும்: பரணி-பூரம்-பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம திசையே சுக்கிர திசையாக வரும். அசுவினி-மகம்-மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும் இதனால் அவர்களுக்கும் அவர்கள் பிறந்த குடும்பத்துக்கும் பாதிப்பு வரும் என்பது பலரது கருத்து. இதை சில ஜோதிடர்கள் கூறினாலும் அப்படி எதுவும் வராது என்பதே கருத்து.

காதல் திருமணம்: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இள வயதிலேயே சுக்கிர திசை வரும். இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வரும் இருவரை திடீரென ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி மனதில் காதல் மணியடிக்க வைப்பார். இளம் வயது திருமணத்தையும் நடத்தி வைப்பார் சுக்கிரன்.

Shukra Dasha: Astrology Memes Shukra mahadasha and remedies

சுக்கிரன் பலம்: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் பண வரவுகளுக்கும் பஞ்சாமிருக்காது. கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு. நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும்.

நீசபங்க ராஜயோகம்: பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய்க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது. அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

சுக்கிர திசை மீம்ஸ்: சுக்கிர திசை சுக்கிர புத்தி நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கஷ்டம் துக்கம், பிரிவு, சண்டை சச்சரவும் நாடோடியாக திரியும் அவலம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிரன் உடன் ராகு செவ்வாய் சேர்ந்திருந்தால் ஆன்மீக பாதையில் சென்றால் கூட அவர்களை சும்மா விடாது கிரகங்கள். அதையே நகைக்சுவையாக மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஜோதிடர். என்னது சுக்கிர திசையில யுடியூப்ல சாமி பாட்டு கேட்கிறானா? சுக்கிர திசைன்னா ஒரு டிசிப்பிளின் வேணா.. டேய் ராகு காட்றா அந்த கிளாமர் சாங்ஸ் லிஸ்ட்டை என்று சுக்கிரன் சொல்வது போல மீம்ஸ் கிரியேட் செய்துள்ளார் அந்த ஜோதிடர்.

சுக்கிர திசை நடக்கும் காலத்தில் தவறான செயல்களில் ஈடுபடாமல் தப்பிக்க வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது நன்மை தரும். மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். விரலில் வைரக்கல்லை அணியலாம். ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரையும் தாயாரையும் வணங்க சுக்கிர திசை நடைபெறும் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+