கையிலும் பையிலும் பணம் நிக்கலையா? - இந்த பரிகாரம் செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்

இங்கு இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பணத்தை சேமிப்பதற்கான பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோதிடத்தின் படி, நம் வாழ்வில் நடக்கப் போகும் ஒவ்வொரு விஷயமும் காரணமின்றி மற்றும் எச்சரிக்கையின்றி நடக்காது. அது நல்ல காரியமாகட்டும் அல்லது கெட்ட காரியமாகட்டும், எந்த ஒரு விஷயம் நடக்கப் போவதாக இருந்தாலும், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.

எப்படி பிறப்பு இறப்பின் அறிகுறியோ, மோசமான உடல்நிலை நோயின் அறிகுறியோ, அதேப் போல் ஒருவர் சந்திக்கப் போகும் நிதி பிரச்சனையும் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிக்காட்டும். இங்கு இனிமேல் உங்கள் கையில் பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பணப்பிரச்சினை வரப்போவதை காட்டும் அறிகுறிகளை கூறியுள்ளார் அஸ்ட்ரோ வி. பழனியப்பன்.

எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ உங்களைத் தேடி கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீண் செலவுகளால் பணம் கையில் நிற்கப் போவதில்லை என்றும் அர்த்தம்.

செல்வ வளம் குறையும் அறிகுறி

செல்வ வளம் குறையும் அறிகுறி

தம்பதியருக்குள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சண்டைகள் வந்தவாறு இருந்தால் வீட்டில் செல்வ வளம் குறையப் போகிறது என்று அர்த்தம். மகாலட்சுமி வீட்டிற்குள் நுழைய யோசிப்பார். உங்களைத் தேடி வந்துக் கொண்டிருந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கடைசி நேரத்தில் கை நழுவினால், நிதி பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

செல்லப்பிராணி

செல்லப்பிராணி

ஜோதிடத்தின் படி யார் ஒருவர் நிதி பிரச்சனையால் மோசமாக அவஸ்தைப்படப் போகிறாரோ அவர்களது வாயில் இருந்து அளவுக்கு அதிகமாக எச்சில் சுரக்கும் என சொல்கிறது. வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த செல்லப் பிராணி திடீரென்று இறந்துவிட்டால், அந்த குடும்பம் பணப் பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறது என்று அர்த்தம்.

வீட்டில் நீர் ஒழுகக் கூடாது

வீட்டில் நீர் ஒழுகக் கூடாது

வீட்டின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்தால், அதுவும் அந்த வீட்டில் உள்ள குடும்பம் கடுமையான பணப் பிரச்சனையால் கஷ்டப்படப் போகிறது என்று அர்த்தம். கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் வந்தால், அது உங்கள் சேமிப்பு முழுவதையும் காணாமல் செய்யப் போகிறது என்று அர்த்தம்.

 தங்கம் தொலைதல்

தங்கம் தொலைதல்

வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் தெரியாமல் சிதறினால், அதுவும் அந்த குடும்பம் பணப் பிரச்சனையை சந்திக்கப் போவதைக் குறிக்கிறது. தங்கத்தை இழந்தாலோ அல்லது வைத்த இடம் தெரியாமல் போனாலோ, அது உங்களுக்கு பெரும் பண இழப்பை ஏற்படுத்தப் போவதைக் குறிக்கிறது.

உடைந்த பொருட்களை தூக்கி வீசுங்கள்

உடைந்த பொருட்களை தூக்கி வீசுங்கள்

பணப்பற்றாக்குறை நீங்கவும், வாங்கிய கடன் தீரவும் திருப்பவும் கடன் பெறாமல் இருக்கவும், சேமிப்பு உயரவும் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். வாஸ்து தோஷம் காரணமாகவும் பணம் வரும் வாய்ப்பு அடைபடும். உடைந்த நாற்காலி, சோபா, பெட் ஆகிய பொருட்களை வீட்டிற்குள்ளேயோ, பிறர் கண்பார்வையில் படும்படியோ வைக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டார். வீட்டில் அதிக அளவு உணவை சமைத்து வீண் செய்ய கூடாது. அதை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நல்ல விதமான ஆற்றல் இயங்க துவங்கும். கடனும் விரைவில் குறைவதை காணலாம்.

 செல்வம் பெருக்கும் சோழிகள்

செல்வம் பெருக்கும் சோழிகள்

மகாலட்சுமியின் பிறப்பிடமான கடலில் தோன்றிய காரணத்தால், நமது நாட்டில் ஆன்மிக பயிற்சி மற்றும் பூஜைகளுக்கு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வீட்டில் மகாலட்சுமிக்கு உரிய பூஜைகளை செய்யும்போது சோழிகளை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, நவராத்திரி காலங்களில் வீடுகளுக்கு வரும் பெண்கள், தேவியின் வடிவமாக கருதப்பட்டு மஞ்சள், குங்குமத்தோடு சோழிகளை வழங்குவதும் நமது நாட்டில் பல இடங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளில் வியாபார ரீதியான தொடர்புகளில் சோழிகள் பணமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சோழி உடைகள்

சோழி உடைகள்

உலகின் பல நாடுகளில் அதிர்ஷ்டத்துக்காக ஆடைகளில் கோர்த்து அணிவது, மாலையாக அணிவது, மோதிரமாக அணிவது, இடுப்பில் அணிவது என்று ஆபரணமாக சோழிகள் பயன்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் சோழிகளால் தயாரிக்கப்பட்ட மாலையை தலையை சுற்றி அணிவதால், பொருளாதார வளம் பெருகும் என்றும், ஆடைகளில் கோர்த்து அணிவதால் ராஜ சன்மானம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. உலகின் பல நாடுகளில் திருமணத்தின்போது, சோழிகள் கோர்க்கப்பட்ட ஆடைகள் அணிவதும், பரிசாக தருவதும் நடைமுறையில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகளின் சில பகுதிகளில் சோழிகளை ஒன்றாக நூலில் கோர்த்து ‘நெக்லஸ்' போன்று கழுத்தில் பெண்கள் அணிந்து கொள்வது நாகரிகமாக இருக்கிறது.

 வெற்றிலை மாலை சாற்றுங்கள்

வெற்றிலை மாலை சாற்றுங்கள்

கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாக கட்டி அணிவிக்கவும். கேதுவையும் விநாயகரையும் வழிபட வேண்டும். கேதுவுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம் செய்யவும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம் அணிவிக்கவும். எருக்கம்பூ மாலையும் அணிவிக்கலாம். பால் சாதம், தயிர் சாதம், மற்றும் நவதான்ய வகைகளை வேகவைத்து சுண்டலாக செய்து படைக்கவும். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதோடு முடிந்த வரை அன்னதானம் வழங்கவும். மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிடைக்கும்.

 பூஜை அறையில் நெய் தீபம்

பூஜை அறையில் நெய் தீபம்

கடன் மட்டுமின்றி அனைத்து பிரச்சனைகளும் தீர நமது வீட்டில் துர் சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் குடிகொள்ள வேண்டும். நல்ல சக்திகளை குடிகொள்ளச் செய்ய நாம் சில எளிய முறைகளை கடைபிடித்தாலே போதும், தினமும் காலையில் ஆறு மணிக்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஒரு நெய் தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு உங்கள் குலதெய்வத்திடமும் உங்கள் இஷ்ட தெய்வத்திடமும் மனமுருகி வேண்டுங்கள்.

தண்ணீர் சிக்கனத்தால் பணம் வரும்

தண்ணீர் சிக்கனத்தால் பணம் வரும்

மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபடுங்கள். வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் யாரும் தூங்கிக்கொண்டிருக்க கூடாது. தீப வழிபாடு செய்வதோடு, சிலவற்றை கடைபிடிப்பது அவசியமாகிறது. தேவை இல்லாமல் தண்ணீரை செலவு செய்யக்கூடாது. வீட்டு குழாயில் தண்ணீர் சிந்தாமல் மூடிவைக்க வேண்டும். இந்த பரிகாரங்களைச் செய்தால் பணப்பிரச்சினை நீங்கி செல்வம் பெருகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+