ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி இன்று மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்.
திருச்சி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் இணைந்து நெல்லளவு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் தேதி சித்திரை தேரோட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் நம்பெருமாள் அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை நம்பெருமாள் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் நம்பெருமாள். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி 2ம் ஆண்டாக விழா நடைபெறுகிறது. 7ம் நாள் விழாவான இன்று மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை காலையில் வெள்ளி குதிரை வாகனம், மாலை தங்க குதிரை வாகனத்தில் கருடமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் தேதி சித்திரை தேரோட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் நம்பெருமாள் அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10ம் தேதி சப்தாவரணம் நடைபெறும். 11ம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications