Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2022: கும்ப ராசியில் தேவ குரு உடன் இணையும் அசுர குரு சுக்கிரன் - யாருக்கு யோகம்

மகர ராசியில் இதுநாள் வரை சஞ்சரித்த காதல் நாயகன் சுக்கிரன் இனி கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன் மகர ராசியில் இருந்து இனி கும்ப ராசியில் தேவ குரு உடன் இணைந்து சஞ்சரிக்கப் போகிறார். மார்ச் 31ம் தேதி காலை 8.54 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சுக்கிரன் ஏப்ரல் 27ம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த சுக்கிர பெயர்ச்சியாலும் குரு சுக்கிரன் கூட்டணியாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவை. சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இந்த சுக்கிர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் நடைபெறப்போகும் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் குடும்ப ஸ்தான அதிபதி மற்றும் களத்திர ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் குரு உடன் கூட்டணி அமைக்கிறார். திடீர் பண வரவு அதிகரிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினை நீங்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள். மகிழ்ச்சியடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் மூலம் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெள்ளி, செவ்வாயில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வர நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இன்று முதல் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து சஞ்சரிக்கப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். அம்மன் கோவில்களில் சந்தனம் தானம் செய்யலாம்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார் பணத்தட்டுப்பாடு நீங்கும், வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. பணவரவும் அதிகரிக்கும். அப்பா வழியில் உதவி கிடைக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். சிவனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனம் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த சுக்கிரன் இன்று முதல் எட்டாம் இடத்தில் மறைகிறார். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை வெள்ளிப்பொருட்கள் வாங்கி அம்மாவிற்கு பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம்.

சிம்மம்

சிம்மம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் குரு உடன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கனிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். களத்திரகாரகன் பார்வை உங்கள் மீது படுவதால் எதிர்பாலினத்தவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லை எனில் சமூகத்தில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

கன்னி

கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குதூகலப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையையும் அம்மனையும் வணங்கவும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசி நாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். பொருளதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். சுப காரியங்கள் சாதகமாக முடியும். வெற்றிகரமான கால கட்டம் இது. நண்பர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்வீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் திக் பலம் பெறுவதால் தடைபட்ட காரியம் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அம்மா உடன் நெருக்கம் கூடும். நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். வம்பு வழக்கு பிரச்சினையால் அலைச்சல் அதிகமாகும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் சில ஆலயங்களில் அம்மனுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்புகள் மறையும்.

தனுசு

தனுசு

சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன பிரச்சினை ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். மகளின் திருமணத்தை சற்றே தள்ளிப்போடுவது நல்லது. பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைகள் ஏற்படும். முயற்சி வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தர பாதிப்புகள் குறையும்.

மகரம்

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து இனி 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். சுப விரைய செலவு ஏற்படும். வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம்.வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கிக் கொடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+