Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுபகிருது தமிழ் புத்தாண்டில் யாருக்கு உயர் பதவியும் பட்டங்களும் தேடி வரப்போகிறது தெரியுமா?

சுபகிருது தமிழ் புது வருடம் பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் சில ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருள். தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்வார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக்கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு நிறைய சுபங்களைத் தரப்போகிறது. ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. ராசிக்கு தன ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்க, மூன்றாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், நான்காம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன், ராகு இணைந்திருக்க தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. சூரிய பகவான் ஐந்தாம் வீட்டில் பாக்ய ஸ்தான அதிபதி சூரியனுடன் புதன் இணைந்திருப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சாதனைகள் புரியப்போகிறீர்கள். ஏற்றுமதி தொழில் லாபத்தைத் தரும். ஆன்லைன் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தரும். வேலை வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கண்டங்கள் விலகும். நோய்கள் நீங்கப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். உங்களுடைய ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நண்பர்கள் எதிரிகளாக மாற வாய்ப்பு உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். நல்ல பண வருமானம் வந்து சேரும். பேச்சில் கவனம் தேவை. யோசித்து பேசுவது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதம் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மொத்தத்தில் சுபகிருது தமிழ் புத்தாண்டு அதிக கவனம் தேவைப்படும் ஆண்டாக அமைந்துள்ளது.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. ராசி நாதன் சனிபகவான் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இரண்டாம் வீட்டில் செவ்வாய் உடன் சுக்கிரன் பயணம் செய்கிறார். மூன்றாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். நான்காம் வீட்டில் சூரியன், ராகு, புதன், பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த ஆண்டு கிரகங்களின் பயணமும் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. சொத்து சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் ஏற்படும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விட்டுக்கொடுத்து சேல்வது நல்லது. குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் மகிழ்ச்சியான திருமணவாழ்க்கை அமையும். தகவல் தொடர்பு சிறப்படையும் என்றாலும் பேச்சில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். பொறுமையை கையாளுங்கள். மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பதவியில் புரமோசன் கிடைக்கும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபத்தைத் தரும். மொத்தத்தில் சுபகிருது தமிழ் புத்தாண்டு சுபங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, சுபமான ஆண்டாக சுபகிருது ஆண்டு அமைந்துள்ளது. நல்ல விசயங்கள் நிறைய நடைபெறும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அற்புதமான கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் அமைந்துள்ளது. தன காரகனும் வாக்கு ஸ்தான அதிபதியுமான குரு பகவான் ஆட்சி பீடம் ஏறி அமர்ந்துள்ளார். விரைய ஸ்தானத்தில் சனிபகவான், மூன்றாம் வீட்டில் சூரியன், ராகு,புதன், ஒன்பதம் வீட்டில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சுபிட்சமான ஆண்டாக அமைந்துள்ளது. பொற்காலம் தேடி வரப்போகிறது. ஆண்டு முழுவதும் நல்ல பணப்புழக்கம் இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் பண வரவு சரளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயர்கல்வி யோகம் கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலம் வரப்போகிறது. ஏழரை சனி சஞ்சாரம் சற்றே பாதிப்பை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இதுவும் கடந்து போகும் என்பது போல சிரமங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வருகிறது. நீங்கள் நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கப் போகிறது. குல தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் போகிறது. நன்மைகள் நிறைந்த முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே... உங்களுக்கு இந்த ஆண்டு சுப செலவுகள் தேடி வரப்போகிறது. சுபத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல சந்தோஷமான செய்திகள் தேடி வரப்போகிறது. காரணம் ஜென்ம ராசியில் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். பொன்னான காலம் வரப்போகிறது. நல்ல பதவி தேடி வரும். திறமைக்கேற்ப மதிப்பும் அங்கீகாரமும் தேடிவரும். திருமணம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கைகூடி வரும். இந்த ஆண்டு நல்ல செய்திகள் நிறைய தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மகளின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வது போல உங்களின் நல்ல மனதிற்கு நல்லதாகவே நடைபெறும். வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். கல்வியில் கூடுதல் கவனம் அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகிறீர்கள். எதிர்பாராத பண வரவு வரும். இழந்த சொத்துக்களை மீட்கப்போகிறீர்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனவே உறவினர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குல தெய்வத்தை விடாமல் வழிபடுங்கள். சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணரையும் கோமதி அம்மனையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+