திருப்பதி பிரம்மோற்சவம்.. திருமலைக்கு திருக்குடைகள் ஊர்வலம்.. சென்னையில் டேக் டைவர்சன்.. முழு விபரம்
சென்னை: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளன. திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் சென்னையில் ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோவில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பஜனை, பிரபந்தக் குழுவினர் மற்றும் கலை நிகழ்ச்சிக் குழுக்கள் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.
அதற்காக திருக்குடை ஊர்வலம் இன்று காலை பூக்கடையில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை புனஸ்காரங்களுடன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்களின் கரகோஷத்துடன் ஊர்வலமாக புறப்படுகிறது. திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.
யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது. இன்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.
20ஆம் தேதி கீழ்த்திருப்பதி சென்றடைகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. 21ஆம் தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரதானமான வைபவம். இந்த ஆண்டு வரும் 22ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு புதிய குடைகள் நிழல்தரும். திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை 16ஆம் தேதி காலை 10 மணி முதல் சென்னையில் ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம் முழு விபரம்: இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில், காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
மதியம் 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பால சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். ஈ.வெ.ரா.சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.
ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
திருக்குடை ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணாகுரு சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் நாராஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.
ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி தெற்கு தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications