மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எந்த நம்பர், என்ன கலர் லக்கி தெரியுமா?
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசி எண்களை அறிந்து கொள்வோம்.
சென்னை: சனிக்கிழமையான இன்று மீனம் ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபத்தில் சூரியன், புதன், கடகத்தில் சுக்கிரன், ராகு, துலாமில் குரு, தனுசில் சனி, மகரத்தில் கேது, செவ்வாய் மீனத்தில் சந்திரன் என இன்றைய கிரக நிலை அமைந்துள்ளது.
இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற லக்கியான நம்பர், ராசியான நிறம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். கையிருப்பு கரையும். அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். சுக்கிரன் நான்காம் இருக்கிறார் வீட்டுக்கு வேண்டிய ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1, 6.

ரிஷபம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் பண வரவு அதிகரிக்கும் செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும்.
சுக்கிரன் 3வது வீட்டில் இருபபதால் இன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற ஏற்ற தருணம் இது. குரு 6வது வீட்டில் இருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், நீலம், வெள்ளை ராசியான எண்கள்: 2, 6.

மிதுனம்
ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அலுவலகத்தில் அலைச்சல் ஏற்படும். புதிய வாகனம் யோகம் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குச் சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், பச்சை. ராசியான எண்கள்: 5, 9.

கடகம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரனுடன் ராகு இணைந்துள்ளார். பாக்கெட்டில் பணம் பத்திரம். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. நல்ல காரியம் செய்ய துவங்குவதற்கு முன் நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, நீலம். ராசியான எண்கள் 1,7.

சிம்மம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று இரவு வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், பச்சை. ராசியான எண்கள் 3, 5.

கன்னி
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே இன்று ரொமான்ஸ் அதிகரிக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 7

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. ராசியான நிறம் வெள்ளை, இளஞ்சிவப்பு, ராசியான எண்கள் 3, 6.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள்.
குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துங்கள். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா. ராசியான எண்கள் 1,9.

தனுசு
சந்திரன் ராசிக்கு 4வது வீட்டில் இருப்பதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. ராசிநாதன் குரு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பாக்கெட்டில் பணம் இருந்து கொண்டேயிருக்கும் ஜென்ம சனியால் அசதி ஏற்படும். வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்
ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் இருப்பதால் முயற்சிகள் கைகூடும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும் நாளாகும். இன்று சுப செலவுகள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள் 2,6

கும்பம்
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் இருப்பதால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். இன்று வர வேண்டிய பணம் கைக்கு வரும். ராசிக்கு 12வது வீட்டில் செவ்வாய், கேது அமர்ந்திருப்பதால் ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடி வரும். ராசியான நிறம் சிவப்பு, பச்சை. ராசியான எண்கள்: 2,9.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications