இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கனுமா? உலக நோய் தடுப்பு தினத்தில் குரு பகவானை வணங்குங்கள்!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  சென்னை: உலக நோய்த் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்று பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக பல்வேறு நோய்களுக்கும் நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காக்கும் விதமாக தேவையான தடுப்பு மருந்தை சரியான காலத்தில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது.

  World Immunization day is celebrated every year on november 10 to make people aware about the importance of timely vaccinations

  தடுப்பு மருந்தின் அவசியம்:

  தாயிடம் இருந்து குழந்தைக்குக் கிடைக்கும் நோய் எதிர் பொருள் நீடித்து நிற்பதில்லை. எனவே குழந்தையை நோய் தாக்கும் அபாயம் உருவாகும். மேலும் நோய்த்தடுப்பாற்றலை உருவாக்கும் போது உயிருக்கு ஆபத்தான நோய்களிடம் இருந்து அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பு மருந்து அளிக்கத் தொடங்கியதில் இருந்து உடலில் காப்பு எதிர்வினை உருவாவது வரையுள்ள செயல்முறைகள் நோய்த்தடுப்பு எனப்படும். ஓர் உயிரியல் தயாரிப்பான தடுப்பு மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வலுப்படுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தும் அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தும், அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தும் உருவாக்கப்படும்.

  தன்தாக்கு நோய்கள்

  நம் உடலின் நோய் தடுப்பாற்றல் மண்டலம் என்பது நம்மை பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் தற்காப்பு அமைப்பு ஆகும். நம் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளையும், தீங்கு செய்யும் உயிரணுக்களையும் அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நம்மை இது பாதுகாக்கிறது. ஆனால் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் குறைபாடுகள் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து அதிகமான தொற்றுநோய்களுக்கு நாம் ஆளாக நேரிடும். நம் உடலின் சொந்த உயிரணுக்களை (செல்களை) இனம்காண முடியாமல் சில நேரங்களில் நோய் தடுப்பாற்றல் மண்டலம் தன் உடலை தானே சேதப்படுத்தவும் கூடும்.

  நோய் தடுப்பாற்றல்:

  தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்கு தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையை நோய்த்தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாக சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது. நோய்த்தடுப்பே மலிவான ஒரு சுகாதார முதலீடாகும்.

  World Immunization day is celebrated every year on november 10 to make people aware about the importance of timely vaccinations

  நோய் தடுப்பாற்றல் விழிப்புணர்வு:

  நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு குணமாக்கும் ஆற்றல் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்த புரிந்துகொள்ளுதல் மக்களிடம் இன்னும் தெளிவாக இல்லை என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

  நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இம்மருந்துகள் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உலக தடுப்பாற்றல் விழிப்புணர்வு வாரத்தில் முயற்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையே, உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், மற்ற நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

  மனித உயிர்களைப் பாதுகாக்கும் தடுப்பு மருந்துகளின் விலை உலகில் அதிகரித்துள்ளதால் சில நாடுகளில் சிறார்க்கு தடுப்பு மருந்துகளை முழுமையாக வழங்க முடியாநிலை ஏற்பட்டுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

  சுலபமாக கிடைக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள:

  சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, சிவப்பு திராட்சை மற்றும் ப்ளூபெர்ரி பழங்களில் காணப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற பாலிஃபீனால் கூட்டுப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

  இந்தியாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. அப்படி எளிதில் கிடைக்கக்கூடிய அதுவும் விலை அதிகமில்லாதது வைட்டமின் சி உணவுவகைகளான பழங்கள், பூண்டு, ஆளி ,விதை , மஞ்சள்,தயிர், பாதாம், நண்டு, கடல் சிப்பி மற்றும் சிவப்பு இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், கிரீன் டீ, கேரட், சிவப்பு பூசணி மற்றும் பப்பாளி

  நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பாற்றலுக்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:

  1. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோய் தடுப்பாற்றலுடன் விளங்க அவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் நிறைந்து நிற்க்க வேண்டும். லக்னாதிபதி லக்னத்திலேயே நிற்பது சிறப்பு. அதிலும் அவர் ஆட்சியாகவோ உச்சமாகவோ நின்றுவிட்டால் மிக்க பலமிக்கவராவார். அவ்வாறு நிற்க்கும்போது அவருக்கு நோய் தடுப்பாற்றல் இயற்க்கையாகவே மிகுந்து இருக்கும்.

  2. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்க லக்னத்திற்க்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கால புருஷ ராசிக்கு 6/8/12 பாவங்எளான கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிகளின் தொடர்பு இருக்க கூடாது. மேற்கண்ட ராசிகள் லக்னமாக இருந்து லக்னாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் விதிவிலக்கு உண்டு.

  3. ஒரு ஜாதகருக்கு அவர்து லக்னத்தில் மாந்தி நிற்பது மற்றும் லக்னத்தை மாந்தி பார்ப்பது ஆகியவை ஜாதகருக்கு நோய் தடுப்பாற்றலை குறைத்து அடிக்கடி நோயினால் அவதியுற செய்யும்.

  4. ஜெனன ஜாதகத்தின் 6/8/12 தொடர்புகள் மற்றும் ராகு கேதுக்களின் தொடர்பும் லக்னத்திற்க்கு இருப்பது நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

  5. மேலும் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், திதி சூன்ய ராசியாதிபதிகள் தொடர்பும் நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

  6. லக்னம் மற்றும் லக்னாதிபதிகள் ம்ருத்யு பாகையில் அமைவதும் நோய் தடுப்பாற்றலை குறைத்துவிடும்.

  7. ஆத்மகாரகன் எனப்படும் சூரியன் உலகிற்கெல்லாம் அளப்பறிய சக்திகளை வழங்குபவன் ஆவான். சூரியனின் நிலை ராகு கேதுவுடன் இனைந்து கிரகண தோஷம் பெறாமலும், 6/8/12 தொடர்புகள் பெறாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை ஜெனன ஜாதக ஆத்ம காரக கிரகத்துக்கும் பொருந்தும்.

  8. உடம்பு மற்றும் ரத்தத்தின் காரகன் சந்திரன் ஆகும். இவரே மனதிற்கும் காரகன் ஆவார். தன்னம்பிக்கை பெற்று மனோ திடம் நிறைந்திருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி பலனளிக்கும்.

  9. காலபுருஷ ராசியின் லக்னாதிபதி மற்றும் ரத்தத்தின் காரகனான செவ்வாய் பலம் பெற்று இருக்கவேண்டும்.

  10. உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்கவேண்டும்.

  11. நோய் தடுப்பாற்றலை தரும் கிரகம் குரு பகவானாவார். குருபகவானின் அருள் பார்வை இருந்தால் மட்டுமே ஓருவருக்கு நோய் தடுப்பாற்றல் பலனளிக்கும்.

  12. திரிகோண ஸ்தானங்களில் சுப கிரகங்களும் கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரகங்கள் ஆட்சி பலத்தோடும் நிற்க்க வேண்டும்.

  13. ஆண்டிபயாடிக் என்பவை ராகு கேதுக்களின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். எனவே ஆண்டி பயாடிக் உபயோகத்தை குறைத்து வருமுன் காக்கும் பழக்க வழக்கத்தை கொள்ளவேண்டும்.

  பாலாரிஷ்ட தோஷங்கள்:

  பாலரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.

  சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.

  மாந்தியின் நிலையும் நோய்தடுப்பாற்றலும்:

  ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபகிரகமாகவும், சனி பகவானின்மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்திஎந்த வீட்டில் இருக்கிறதோ அந்தஸ்தானம் பாதக ஸ்தானமாகும். அந்தஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும்வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களைபார்க்கும். மாந்தியின் பார்வை பதியும்வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பார்வை, சேர்க்கை இல்லாமல் மாந்தி லக்னத்தில் அமர்ந்தால் அவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்த்து அடிக்கடி நோய்வாய் பட நேறும்.

  ஸ்ர்ப கிரஹங்களின் தாக்கம்:

  ஜாதகத்தில் லக்னத்தில் ஸர்ப கிரஹங்களான ராகு-கேது நிற்பது, லக்னம்/லக்னாதிபதி/சந்திரன் ஸர்ப கிரஹங்களின் திரிகோண பார்வையை பெறுவது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் அம்சங்களாகும்

  நோய் எதிர்பாற்றல் தரும் பரிகாரங்கள்:

  ஆயுஷ்ய ஹோமம்:

  ஒரு குழந்தைக்கு பிறந்த முதல் வருட ஜென்ம நக்‌ஷத்திரம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜென்ம நக்‌ஷத்திர நாளில் 'ஆயுஷ்ய சூக்தம்" என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர ஸுக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது வேத முறையிலான நோய் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் முறையாகும்.

  1. நோய் எதிர்ப்பாற்றல் பெற குல தெய்வ வழிபாடு முக்கியமானதாகும். அவ்வப்போது அவரவர் குல தெய்வங்களை சென்று வழிபட்டுவருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும்.

  2. பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரிவர செய்யவேண்டும்.

  3. நவகிரங்களில் நோய் தடுப்பாற்றலுக்கு அனைத்து கிரகங்களையும் வழிபடவேண்டும் என்றாலும் குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

  4. தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

  5. லக்னத்தில் மாந்தி நிற்கபெற்றவர்கள் கும்பகோணத்திற்கு அருகில் நாச்சியார் கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடும்ப சனி கோயிலில் மாந்திக்கும் சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதி நாளில் அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு செய்வது, சென்னை அரக்கோணம் மார்கத்தில் திருவாலங்காட்டில் உள்ள சிவன் கோயிலில் உள்ள மாந்திக்கு வழிபாடு செய்வது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தி நோய்களிலிருந்து காக்கும்.

  6. "கந்தன் திருநீரனிந்தால் வந்த வினை ஓடிவிடும்" எனும் பாடலுக்கு இணங்க

  கந்த ஷஷ்டி கவசம், சண்முக கவசம் ஆகிய ஸ்தோதிரங்களை ஒருவர் தொடர்ந்து ஜெபித்து திருநீரனிந்து வர, ரத்தத்தின் காரகர் மற்றும் காலபுருஷ லக்னாதிபதி பலமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

  7. தசமூலாரிஷ்டம், ச்யவன ப்ராஸ லேகியம், திராஷாதி லேகியம், திரிபால சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  World Immunization Day is celebrated every year on November 10. This day is celebrated to make people aware about the importance of getting timely vaccinations against vaccine preventable diseases. Immunization is the process whereby a person is made immune or resistant to an infectious disease, typically by the administration of a vaccine. Immunization helps protect the child from life threatening diseases. It also helps reduce the spread of disease to other

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more