தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே.. உலக தூக்க தினம்..நல்லா தூங்கினால் உற்சாகம் தானா வரும்!
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். நன்றாக தூங்கினால்தான் நிம்மதியும் உற்சாகமும் கிடைக்கும்.
சென்னை: உறக்கம் உற்சாகத்தை தரும். மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். உறக்கத்தை தொலைத்தவர்கள் எதையோ பறிகொடுத்தது போல இருப்பார்கள். சிலரோ நிறைய பணம் சம்பாதித்தும் தூக்கத்தை தொலைத்தவர்களாக, மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். நன்றாக தூங்கினால்தான் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும். உறக்கத்தின் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக உறக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலக உறக்க தினம் மார்ச் 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
நாளெல்லாம் ஓடி ஆடி வேலை செய்யும் உடலுக்கு சில மணிநேரங்களாவது ஓய்வு தேவை. உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும்,
முதுமை காரணமாகவோ,நோய் பாதிப்பு காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை.
உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம். பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

உறக்கமும் உற்சாகமும்
சிலருக்கு அதிகம் தூக்கம் வரும். சிலருக்கு தூக்கமே வராது. இது இரண்டுமே நல்லதல்ல. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் பலரும் உறக்கத்தை தொலைத்து விட்டு சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். நன்றாக உறங்கி எழுந்தால் மட்டுமே உற்சாகமாக நடமாட முடியும்.

மன அழுத்தம் குறையும்
தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இரவு நேரத்தில் நம் உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்க வேண்டும் என்றால் செரடோனின் என்ற ஹார்மோன் சுரத்தல் முக்கியமானதாகும். இவை இரண்டும் சுரந்தால் மட்டுமே நமது உடலில் தூக்கத்தை கொடுக்கும். இரு ஹார்மோன்களும் நன்றாக சுரந்து தூக்கம் நன்றாக வந்தால் மன அழுத்தம் குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தூக்கம் வர என்ன செய்யலாம்
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிக குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நன்றாக தூக்கம் வர இரவு நேரங்களில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு சாப்பிட்டு முடித்து விடலாம் இதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வரும். இரவில் கொழுப்பு, மசாலா, காரம் மிகுந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. உறங்கும் முன்பாக பால் அருந்தலாம். இரவு எட்டு மணிக்குப் பிறகு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, தியானம், யோகா செய்வது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது,தூங்கச் செல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைதியான தூக்கம்
உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படும் இந்த சமயத்தில் தூக்க பிரச்சினைக்கான ஜோதிட ரீதியான காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம். ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும் நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும். தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். வாழ்க்கை துணையோ படுக்கை சுகம் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்கு குறைவிருக்காது.

தூக்கம் தழுவும் கண்கள்
தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதன், சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள்.

மூளை பாதிப்பு
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. பிறந்த ஜாதகத்தில் ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை கெடுத்து விடுவார்கள். நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாகும். லக்னத்தில் மாந்தி, சந்திரனோடு மாந்தி, புதனோடு மாந்தி, சுக்கிரனோடு மாந்தி இவையெல்லாம் தூக்கத்தை சீரழிக்கும் கிரக சேர்க்கைகளாகும்.

பரிகார தலங்கள்
கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிரன் தலமாகும். மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர், மாங்காடு காமாட்சியம்மனை வணங்கலாம். திருவெண்காடு, திருப்புளியங்குடி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். இங்கு சென்று இறைவனை தரிசிக்க தூக்க குறைபாடு நீங்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications