2023 இயர் எண்டர் ஜோதிடம்: 2024ல் குபேர யோகம்.. குரு பகவானால் திடீர் திருப்புமுனை யாருக்கு?
மதுரை: மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் டிசம்பர் 31 முதல் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குருவின் அருளால் 2024ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகமும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையும் ஏற்படப்போகிறது.
குரு பார்வை பலம்: நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன்களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள்.

மேஷம்: ஜென்ம குரு பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்துவார். எவ்வளவுதான் பணம் வந்தாலும் செலவு கையை கடிக்கும். பொருளாதார நெருக்கடியை சந்திக்க தயாராகுங்கள். சில காலம்தான் கவலை வேண்டாம். 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் குரு பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் அற்புத யோகங்கள் வரப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்தும் வரும்.
மிதுனம்: லாப குரு பண பலத்தையும் மன பலத்தையும் அதிகரிப்பார். தொழிலில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமைதியும் ஆனந்தமும் குடியேறும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குருவின் பயணம் நிறைய விரைய செலவுகளை தரப்போகிறது. பணத்தை பத்திரப்படுத்துங்கள்.
கடகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீடான கர்ம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண முதலீடுகளை கவனமாக கையாளுங்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். குருபகவானின் பார்வை ராசிக்கு இரண்டாம் வீடு நான்காம் வீடு, மற்றும் ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. கடன்கள் அடைபடும். வீடு, சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை. 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் அருளால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. திடீர் திருப்புமுனைகளை சந்திக்க தயாராகுங்கள்.
சிம்மம்: வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். ஒன்பதாம் இடம் தர்ம ஸ்தானம். இந்த இடத்தில் உள்ள கேது, சனியுடன் குருபகவான் இணைகிறார். இந்த கால கட்டத்தில் ஆன்மீக தலங்களுக்கு பயணம் செய்வீர்கள். அப்பாவினால் நன்மைகள் கூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. ராசிக்கு மூன்றாவது வீடு, ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 10ஆம் வீட்டில் குரு பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் திடீர் திருப்பு முனை உண்டாகும்.
கன்னி: குரு பகவான் 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடு, நான்காவது வீடு, 12வது வீட்டினை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள். 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குருவின் பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. குபேர யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.
துலாம்: 2024 ஆம் ஆண்டில் திருமணம் கைகூடி வரும். உங்கள் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். பங்கு வர்த்தகத்தில் பலன் கிடைக்கும். அதிசாரத்தில் ராசிக்கு 7ஆம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்குக் கூடும். பணவரவு அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்: ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் சற்றே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, 12ஆம் வீடு, 10ஆம் வீட்டின் மீது விழுவதால் சில நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பணவரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். திடீர் திருப்புமுனைகளை எதிர்பாருங்கள்.
தனுசு: உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள குருபகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். உடல் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் கூடும். பல வழிகளில் இருந்தும் பணம் வந்து திக்குமுக்காட வைக்கும்.
மகரம்: குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சில நோய்கள் எட்டிப்பார்க்கும். 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு குருவின் பயணம் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறது. குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் கவலைகள் நீங்கப்போகிறது. உங்களை தேடி வரும் பணத்தை எண்ணி வைக்க இடம் தேடுவீர்கள். திடீர் திருப்புமுனைகள் உங்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது.












Click it and Unblock the Notifications