சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் புரமோசன்.. 2024ல் தேடி வரப்போகும் அரச பதவி யாருக்கு?
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த காலங்களில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து மீண்டு வந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு நல்ல பலன்களை தர வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகிறார். கார்த்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் வியாபாரத்தில் அற்புதமான லாபங்களை அள்ளித்தரப்போகிறார். அதிர்ஷ்டகரமான கால கட்டமாகும். 2024ஆம் முடிய சனிபகவான் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சனிபகவான் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பயணம் செய்யும் போது யோக பலன்களை கொடுக்கப்போகிறார்.

அரசு வேலைக்காக தேர்வு எழுதி விட்டு எப்போது ரிசல்ட் வரும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பதில் வரும். அரசாங்க தொடர்புடைய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். உற்சாகமாக உணர்வீர்கள். உடல் சுறுசுறுப்படையும். புதிய வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
நான்காம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மையேற்படும். உறவினர்களுக்கு கர்மகாரியம் செய்ய வேண்டியிருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சுமை கூடினாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். தந்தையால் விரைய செலவு ஏற்படும்.
2024ஆம் ஆண்டு முழுவதும் பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும்.












Click it and Unblock the Notifications