சனி பெயர்ச்சி பலன் 2023: பொற்காலம்.. வெற்றிகள் தேடி வரும்.. யாருடைய வாழ்க்கையில் விடியல் வரும்?
சென்னை: 2024ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சனி பகவானின் பயணத்தால் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
திருவாதிரை நட்சத்திரம் ராகு பகவானின் நட்சத்திரம். மிதுன ராசியில் உள்ளது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் திருவாதிரையும் திருவோணமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சியால் திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் கிடைக்கப்போகிறது.

சனிபகவான் கடந்த 5 ஆண்டு காலமாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களை படாத பாடுபடுத்தி வந்தார். கண்டச்சனி, அஷ்டம சனி என பிரச்சினைகளை சந்தித்த உங்களுடைய வாழ்க்கையில் விடியல் வரப்போகிறது. என்னடா வாழ்க்கை என்று வெறுத்துப்போய் இருக்கும் உங்களுக்கு சனிபகவான் இனி மன நிம்மதியைத் தரப்போகிறார்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சனி பகவான் பலன்களை அள்ளித்தரப்போகிறார். நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவை சந்தித்து உங்களுக்கு சிக்கல்கள் நீங்கப்போகிறது. இதுநாள் வரை ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், கஷ்டங்கள் முடியப்போகும் காலம் வந்து விட்டது. பயம் பதற்றம் நீங்கப்போகிறது. கணவன் மனைவி பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.
கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையப்போகிறது. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டிருப்பீர்கள். இனி உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கப்போகிறீர்கள். கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது.
பள்ளி மாணவர்களுக்கு இனி பாடங்கள் புரியும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பகைகள் நீங்கும். பழைய நண்பர்களின் உதவி வீடு தேடி வரும்.
தடைபட்ட சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறப்போகிறது. திருமணம் கைகூடி வரும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். பாக்ய சனி நிறைய பதவி உயர்வை தேடித்தரப்போகிறார். கடந்த காலங்களில் சனி பகவான் கொடுத்த படிப்பினைகள் உங்களுக்கு இனி கை கொடுக்கும். 2024ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications