அக்டோபர் மாத ராசி பலன் 2021: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி அதிகரிக்கும்
அக்டோபர் மாதத்தில் தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டமும் நல்வாய்ப்பும் எப்படி இருக்கப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை: அக்டோபர் மாதத்தில் தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குதூகலம் நிறைந்த மாதமாக மாறப்போகிறது. இந்த மாதத்தில் உங்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி வரும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும்.
அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது.

சூரியன் 17ஆம் தேதி துலாம் ராசியில் நீச்சமடைகிறார். மாத பிற்பகுதிகளில் குருபகவான் வக்ர கதியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மாத இறுதியில் புதன் துலாம் ராசியில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் எதிர்பார்த்த நற்காரியங்கள் நடைபெறப்போகிறது. ராசி நாதன் குரு இரண்டாம் வீட்டில் இரண்டாம் அதிபதி சனியோடு சேர்ந்து பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் செவ்வாய், சூரியன், புதன், விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
வாக்கு ஸ்தானத்தில் உள்ள குரு சொல்வாக்கு, சமூகத்தில் செல்வாக்கை அதிகரிப்பார். குருவின் பார்வையும் சாதகமாக உள்ளது. தொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியன் செவ்வாய் பதவியில் முன்னேற்றத்தை தருவார். வேலையில் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. புரமோசன் கிடைக்கும். குரு பார்வையில் பத்தாம் இடம் படுகிறது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது உடன் அணைவதால் ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த மாதத்தில் உங்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி வரும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். குரு பலம் கை கூடி வந்துள்ளது. காதல் கை கூடி வரும். காதலன் காதலி இடையே ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்றாக சேரும் காலமாகும். மாணவர்களுக்கு நல்ல காலம் உயர்கல்வி யோகம் தேடி வந்துள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகம் நிறைந்த மாதமாகும்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனியும் குருவும் இணைந்துள்ளனர். ஜென்ம ராசியில் சனி குரு இணைந்திருப்பதால் பாதகம் மட்டுமல்ல சாதகமும் சேர்ந்து வரும். குரு, சனி பார்வை பலங்கள் நன்மையை ஏற்படுத்தும். பாக்ய ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் இணைந்துள்ளனர். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் கேது இணைந்துள்ளதால் சிரமங்கள் ஏதும் இன்றி வாழ்க்கையை நகர்த்தலாம். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடு பயணம் செய்யலாம். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் பேசி முடிக்கலாம் நல்ல வரன் தேடி வரும். இப்போது உள்ள சூழ்நிலையில் நல்ல வரனைப் பேசி முடிக்கலாம். திருமணம் ஆனவர்களுக்கு குடும்பத்தில் சில சங்கடங்கள் நேரலாம், பேச்சில் கோபத்தை குறைத்து விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் அதிகம் நடைபெறும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் கேது உடன் இணைந்திருப்பதால் சில சஞ்சலங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனமும் நிதானமும் தேவை. விழிப்புணர்வும் அவசியம். பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்டுவது அவசியம். மாத பிற்பகுதியில் தொழில் ஸ்தானத்திற்கு வரும் சூரியன் வேலையில் இடமாற்றத்தை ஏற்படுத்துவார். மொத்தத்தில் அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியைத் தரும் மாதமாக அமைந்துள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications